தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Dowry Case: வரதட்சணை வழக்கு - 55 ஆயிரம் ரூபாய்க்கு நாணயங்கள் - நீதிமன்றம் அதிர்ச்சி

Dowry Case: வரதட்சணை வழக்கு - 55 ஆயிரம் ரூபாய்க்கு நாணயங்கள் - நீதிமன்றம் அதிர்ச்சி

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 22, 2023 10:33 AM IST

வரதட்சணை வழக்கில் நீதிமன்றத்தில் 55 ஆயிரம் ரூபாயை நாணயங்களாகச் செலுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரதட்சணை வழக்கு
வரதட்சணை வழக்கு

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவரது மனைவி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருந்தார். இந்த வழக்கு குறித்து விசாரணை செய்த ஜெய்புராஸ் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், மனைவியின் பராமரிப்பு செலவிற்காக 2.25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த தொகையை தஷ்ரத் செலுத்தாத காரணத்தினால், சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த தஷ்ரத்தை வெளியே கொண்டு வருவதற்கு அவரது உறவினர்கள் கடும் முயற்சி செய்து வந்தனர்.

இதன் காரணமாக அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்திருந்த பணத்தை முதல் தவணையாக நீதிமன்றத்தில் செலுத்தத் தொடங்கினர். வரதட்சணை குறித்து புகார் கொடுத்த தஷ்ரத் மனைவி படாத பாடு பட வேண்டும் என நினைத்தார்களா எனத் தெரியவில்லை.

முதல் தவணையாக ரூபாய் 55 ஆயிரம் கொடுத்துள்ளனர். அதையும் ஏழு பெட்டிகளில் வைத்துக் கொடுத்துள்ளனர். இதனைக் கண்ட நீதிபதி வியப்படைந்துள்ளார். இது என்ன என நீதிபதி கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள், நாங்கள் தஷ்ரத்தின் உறவினர்கள், அவர் கட்ட வேண்டிய பணத்தை முதல் தமிழனாக 55 ஆயிரம் ரூபாயை நாணயங்களாகக் கொண்டு வந்திருக்கிறோம். அந்த ஏழு பெட்டிகளும் சுமார் 280 கிலோ எடை கொண்டதாக இருக்கும் என தெரிவித்தனர்.

எப்படி இருந்தாலும் இதனை நாம் புறக்கணிக்க முடியாது எனவே இந்த பணத்தை எண்ணிப் பாதுகாக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார். எனது கட்சிக்காரரைத் துன்புறுத்தும் வகையிலேயே நாணயங்களாக இவர்கள் வழங்கி உள்ளனர் என தஷ்ரத் மனைவியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதற்கு தஷ்ரத் தரப்பில், இந்த நாணயங்கள் அனைத்தும் இந்தியாவில் செல்லக்கூடிய பணமாகும். இதில் இருக்கக்கூடிய 55 ஆயிரம் ரூபாயும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களாக உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

55 ஆயிரம் ரூபாயும் நாணயங்களாக நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்