தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  பிரதமர் பங்கேற்கும் விழாவை புறக்கணிக்கும் தெலங்கானா முதல்வர் - காரணம் என்ன?

பிரதமர் பங்கேற்கும் விழாவை புறக்கணிக்கும் தெலங்கானா முதல்வர் - காரணம் என்ன?

Karthikeyan S HT Tamil
Apr 08, 2023 11:31 AM IST

PM Modi vs Chandrasekhar Rao: தெலங்கானா மாநிலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு விழாவை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.
பிரதமர் மோடி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.

ட்ரெண்டிங் செய்திகள்

ரூ.715 கோடியில் செகந்திராபாத் ரயில் நிலையத்தை மறுவடிவமைப்பு மற்றும் நவீனமயமாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கட்டுமானத் திட்ட பணிகளுக்கும் பிரதமர் மோடி பூமிபூஜை செய்ய உள்ளார்.

மேலும், ஹைதராபாத் புறநகர்ப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாதைகளில் செயல்படும் 13 புதிய மல்டி மாடல் டிரான்ஸ்போர்ட் சிஸ்டம் (எம்எம்டிஎஸ்) சேவைகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

செகந்திராபாத் மற்றும் திருப்பதி இடையேயான அதிவிரைவு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். தொடர்ந்து ஹைதராபாத் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், ஹைதராபாத் பிபி நகர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிபி நகர் எய்ம்ஸ் ரூ.1,350 கோடியில் உருவாக்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் ரூ.7,850 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பாஜகவுக்கு எதிராக தீவிரமாக செயலாற்றி வருகிறார். பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் தெலங்கானா வரும்போது அவர்களை சந்திப்பதை தொடர்ந்து தவிர்த்து வருகிறார் சந்திரசேகர் ராவ். இந்நிலையில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்