Taj Mahal : உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலின் பிரதான குவிமாடத்தில் தண்ணீர் கசிவு .. வீடியோ வைரல்!
Taj Mahal : ஆக்ரா வட்டத்தைச் சேர்ந்த ASI,மூத்த அதிகாரி ஒருவர், தாஜ்மஹாலின் பிரதான குவிமாடத்தில் கன மழை காரணமாக நீர் கசிவு இருப்பதை உறுதிப்படுத்தினார், ஆனால் எந்த சேதமும் இல்லை என்று உறுதியளித்தார்.

Taj Mahal : தாஜ்மஹால் இந்தியாவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹாலின் பிரதான குவிமாடத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர் கசிவு ஏற்பட்டு வளாகத்தில் உள்ள தோட்டத்தில் மூழ்கியதாக செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது. தாஜ்மஹால் வளாகத்தில் உள்ள தோட்டம் நீரில் மூழ்கியதாக கூறப்படும் வீடியோ ஒன்று வியாழக்கிழமை வைரலாக பரவி சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்தது. இந்திய தொல்லியல் துறையின் (ASI), ஆக்ரா வட்டத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், தாஜ்மஹாலின் பிரதான குவிமாடத்தில் கசிவு காரணமாக கசிவு ஏற்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தினார், அதே சமயம் தற்போது ஏற்பட்டுள்ள நீர்கசிவால் கட்டடத்தில் எந்த சேதமும் இல்லை என்று உறுதியளித்தார்.
ஏஎஸ்ஐ, ஆக்ரா வட்டத்தின் கண்காணிப்புத் தலைவர் ராஜ்குமார் படேல், செய்தி நிறுவனமான பிடிஐயிடம், “ஆம், தாஜ்மஹாலின் பிரதான குவிமாடத்தில் கசிவு இருப்பதை நாங்கள் கவனித்தோம். ஆய்வு செய்ததில், கசிவு ஏற்பட்டு, சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரியவந்தது. ட்ரோன் கேமராவைப் பயன்படுத்தி குவிமாடத்தின் நிலையை நாங்கள் சரிபார்த்தோம்.
வியாழன் மாலை, நினைவுச்சின்னத்தின் தோட்டங்களில் ஒன்று மழைநீரில் மூழ்கியதைக் காட்டும் 20 வினாடி வீடியோ வைரலானது. இது சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்தது, அவர்களில் பலர் இந்த காட்சியை படம் பிடித்தனர்.