Death Anniversary of Mumtaz : உலகின் தலைசிறந்த காதலி! ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் நினைவு தினம் இன்று!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Death Anniversary Of Mumtaz : உலகின் தலைசிறந்த காதலி! ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் நினைவு தினம் இன்று!

Death Anniversary of Mumtaz : உலகின் தலைசிறந்த காதலி! ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் நினைவு தினம் இன்று!

Priyadarshini R HT Tamil
Jun 17, 2023 05:45 AM IST

Death Anniversary of Mumtaz : ஷாஜஹான், மும்தாஜ், தாஜ்மஹாலை தெரியாதவர்கள் இருக்க முடியுமா? அந்த மும்தாஜின் நினைவு தினம் இன்று.

மும்தாஜ் நினைவு தினம்
மும்தாஜ் நினைவு தினம்

இவர் அப்துல் ஹசன் அஷஃப் கானின் மகள். அப்துல் ஹசன் ஜாஹாங்கீர் மன்னனின் மனைவி நூர்ஜஹானின் சகோதரர். மும்தாஜ் பெர்சியாவின் இளவரசி. இவரை பார்த்தவுடனே ஷாஜஹானுக்கு காதல் வந்துவிட்டது.

1607ம் ஆண்டு ஷாஜஹானுக்கும், மும்தாஜீக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இளவரசர் குர்ரம் என்பது ஷாஜகானின் மற்றொரு பெயர். இவர்கள் நிச்சயம் முடிந்தது முதல், ஷாஜகானின் மிக நெருக்கமான காதலியாகிப்போனார் மும்தாஜ். 

5 ஆண்டுகள் கழித்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அது முதல் இவர்களின் காதலை உலகம் கொண்டாடியது. ஷாஜஹானுக்கு மூன்று மனைவிகள் இருந்தபோதும், அவருக்கு மிக விருப்பமான ஒரு மனைவியாக மும்தாஜ் இருந்தார்.

மும்தாஜ், ஷாஜஹானுடன் மிக ஆழமான காதலில் இருந்தார். கவிஞர்களே வியக்கும் அளவுக்கு அழகு, நளினம் மிகுந்தவராக மும்தாஜ் இருந்தார். மும்தாஜே ஷாஜஹானின் நம்பிக்கையான துணையாக இருந்தார். முகலாய சாம்ராஜ்யம் முழுவதும் ஷாஜஹானுடன் இருந்தவர் மும்தாஜ். 

ஷாஜஹானின் மற்ற இரு மனைவிகளின் பெயர் அக்பராபாடி மஹால் மற்றும் காந்தாஹரி மஹால் ஆவார். இவர்களுடன் திருமணம் நடைபெற்றதை தவிர பெரிதாக அவர்களுக்குள் எந்த உறவும் இருந்திருக்கவில்லை. மும்தாஜிடம்தான் ஷாஜஹான் நெருக்கமாக இருந்துள்ளார். ஷாஜஹானுக்கு ஏத்த மனைவியாக மும்தாஜ் இருந்தார் என்று வரலாறு கூறுகிறார். 

அவருக்கு அனைத்து வகையிலும் பக்கபலமாக இருந்தார். இவர் அரசவைக்காக நடத்தப்படும் யானைப்படை மற்றும் சண்டைப்பயிற்சிகளை ஆக்ரா நதிக்கரையில் இருந்து பார்த்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

1630ம் ஆண்டில் மும்தாஜ், தக்காண பீடிபூமி போருக்கு உடன் சென்றார். பின்னர் 1631ம் ஆண்டு ஜீன் 17ம் தேதி அவருக்கு 14வது குழந்தை பிறந்தபோது இறந்துவிட்டார். அந்த துக்கத்தில் இருந்து அவர் மீளவே இல்லை. புர்ஹான்புரில் அவரது உடமைகள் புதைக்கப்பட்டது. 22 ஆண்டுகள் கடின உழைப்புக்குப்பின் தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்டது. 

கிட்டத்தட்ட அவரது செல்வங்கள் அனைத்தையும் தாஜ்மஹால் கட்டுவதற்காக செலவிட்டார். அத்தனை உழைப்பும், செலவும்தான் இன்றளவும் தாஜ்மஹால் நாம் வியக்கும் கட்டிமாகவும், உலக அதிசயங்களுள் ஒன்றாகவும் உள்ளது. உலகிலேயே காதலுக்கான கட்டப்பட்ட நினைவுச்சின்னதமாக டெல்லியின் ஆக்ராவில் இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. உலகம் இருக்கும் வரை காதல் வாழும். காதல் வாழும் வரை இந்த காதல் சின்னமும் மங்கா புகழ்பெற்று விளங்கும். உலகின் தலைசிறந்த காதலி மும்தாஜ் நினைவு தினத்தில் அவர் குறித்து சில தகவல்களை ஹெச்.டி. தமிழ் பகிர்ந்துகொள்கிறது.  

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.