தாஜ்மஹால்! பூட்டப்பட்ட அறைகளின் புகைப்படத்தை வெளியிட்ட தொல்லியல் துறை
உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மஹாலில் பூட்டப்பட்டிருக்கும் இரண்டு அறைகளின் புகைப்படத்தை இந்திய தொல்பொருள் ஆய்வு துறை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது அந்த அறைகளின் புகைப்படங்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளது. தாஜ்மஹால் அருகே யமுனை ஆற்றங்கரையோர பகுதியில் பூமிக்கு அடியில் அமைந்திருக்கும் இந்த அறைகளின் புகைப்படங்களை, சர்ச்சைகளுக்கு மத்தியில் தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. மே மாதம் 3ஆம் தேதி பாஜகவை சேர்ந்த ரஜ்னீஷ் சிங் என்பவர் அலகாபாத் நீதிமன்றம் லக்நெள கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நினைவுச்சின்னமான தாஜ்மஹால் உள்ளே அமைந்திருக்கும் 20 அறைகளை ஆய்வு செய்வதற்கு குழுவை அமைக்க வேண்டி மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இதன் மூலம் தாஜ்மஹாலில் இந்து கடவுள்களின் சிலைகள் ஏதும் உள்ளனவா என்பதை கண்டறிய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது தாஜ்மஹாலில் பூட்டப்பட்ட இரண்டு அறைகளின் புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு தொல்லியல் துறை சார்பில் பகிரப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த பராமரிப்பு பணிகளுக்கு பிறகு இதனை வெளியிட்டுள்ளது. இதில், சிதைந்து போன சுண்ணாம்பு பூச்சு நீக்கப்பட்டு பாரம்பரிய முறையில் புதிதாக சுண்ணாம்பு பூசப்பட்டதாக தொல்லியல் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திமடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், நினைவுச்சின்னங்களை பாதுகாப்பதென்பது தொல்லியல் துறையின் தலையாய கடமையாக இருப்பதாகவும், அதை முறையாக பராமரித்து முக்கிய பகுதிகளை சீர் செய்ய பணிகளில் தவறாமல் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலில் உள்ள கல்லறைக்கு அடிப்பகுதியில் ரகசிய அறைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த அறை தொடர்பாக ஆய்வு செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலகாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் வலதுசாரி ஆர்வலர்கள் பலரும் தாஜ்மஹால் என்பதை தேஜோ மாஹலயா, சிவன் கோயில் இருந்த இடம் என்றே கூறுகிறார்கள். தாஜ்மஹால் இருந்த இடத்தில் இந்துக் கோயில் இருந்ததாகவும், அவை அடியில் புதைக்கப்பட்டு அதன் மூடிய பகுதியின் மேல்தான் தாஜ்மஹால் கட்டப்பட்டிருப்பதாகவும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் பலரும் கூறுகிறார்கள்.