Supreme Court new judges: உச்ச நீதிமன்றத்திற்கு இரண்டு புதிய நீதிபதிகள்.. தமிழகத்தில் இருந்து ஒரு நீதிபதி தேர்வு!
Supreme Court of india: நீதிபதிகள் எச்.என்.கோடீஸ்வர் சிங் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Supreme Court new judges: உச்ச நீதிமன்றத்திற்கு இரண்டு புதிய நீதிபதிகள்.. தமிழகத்தில் இருந்து ஒரு நீதிபதி தேர்வு!
மணிப்பூரைச் சேர்ந்த ஒருவர் உட்பட உச்ச நீதிமன்றத்திற்கு இரண்டு நீதிபதிகளை நியமிப்பதற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு செவ்வாயன்று அனுமதி அளித்துள்ளார். மற்றொரு நீதிபதி ஆர் மகாதேவன் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்த தகவலை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் (I/C) அர்ஜுன் ராம் மேக்வால் பகிர்ந்துள்ளார்.