தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Jammu And Kashmir: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்: 40 தொகுதிகளில் போட்டியிட காய்நகர்த்தும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி!

Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்: 40 தொகுதிகளில் போட்டியிட காய்நகர்த்தும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி!

Marimuthu M HT Tamil
Jun 15, 2024 05:35 PM IST

Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், 40 தொகுதிகளில் போட்டியிட ஐக்கிய ஜனதா தளம் கட்சி காய் நகர்த்தி வருவதாகத் தெரிகிறது.

Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்: 40 தொகுதிகளில் போட்டியிட காய்நகர்த்தும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி!
Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்: 40 தொகுதிகளில் போட்டியிட காய்நகர்த்தும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி!

Jammu and Kashmir: யூனியன் பிரதேசமாக இருக்கும் ஜம்மு - காஷ்மீரில் விரைவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளக்கட்சி போட்டியிடும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

நாற்பது தொகுதிகளில் போட்டியிடும் ஐக்கிய ஜனதா தள அரசு?:

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள அரசு, தனது அரசியல் செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும் யூனியன் பிரதேசமான ஜம்மு -காஷ்மீரில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது நாற்பது வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது. 

ஜம்மு-காஷ்மீரில் 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், இந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று ஊகிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டு, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடைசி சட்டமன்றத் தேர்தல் 2014-ல் நடைபெற்றது. அதன் பிறகு பாஜக மற்றும் பிடிபி கூட்டணியிலான அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால் அது ஜூன் 2018ஆம் ஆண்டில் சரிந்தது.