Arjun Das: ‘லைஃப் டைம் செட்டில்மெண்ட்டா..’ - மலையாள உலகில் அர்ஜுன் தாஸ்! - டைரக்டர் யாரு தெரியுமா?
தன்னுடைய தனித்துவமான குரலால் அடையாளம் காணப்பட்டிருக்கும் இவர், தற்போது மலையாள சினிமாவில் நாயகனாக களமிறங்குகிறார்.

அர்ஜூன் தாஸ்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் அர்ஜூன் தாஸ். தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான அந்தகாரம், அநீதி உள்ளிட்ட படங்கள் மக்களிடத்தில் வரவேற்பை பெற்றன.
இதனிடையே விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர், கமல் நடிப்பில் வெளியான விக்ரம் ஆகிய படங்களிலும் துணை கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.
தன்னுடைய தனித்துவமான குரலால் அடையாளம் காணப்பட்டிருக்கும் இவர், தற்போது மலையாள சினிமாவில் நாயகனாக களமிறங்குகிறார்.இந்தப்படத்தை இயக்குநர் அகமது கபீர் இயக்க இருக்கிறார்.