தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Suicide Bomber Attacks: பாக்., காவல் நிலையத்தில் தற்கொலைப் படை தாக்குதல்.. 6 பேர் பலி.. 25 பேர் படுகாயம்!

Suicide Bomber Attacks: பாக்., காவல் நிலையத்தில் தற்கொலைப் படை தாக்குதல்.. 6 பேர் பலி.. 25 பேர் படுகாயம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 12, 2023 01:22 PM IST

டி.டி.பி. ஒரு தனிக் குழுவாக இருந்தாலும், ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் நெருக்கமாக கூட்டணி வைத்துள்ளது

பாகிஸ்தானில் உள்ள காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்
பாகிஸ்தானில் உள்ள காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

சில தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும், பின்னர் தாக்குதல் நடத்திய 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். பல அதிகாரிகள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் என்ற நகரில் இந்த தாக்குதல் நடந்ததாக இம்ரான் கான் தெரிவித்தார். தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அல்லது டி.டி.பி என்றும் அழைக்கப்படும் தீவிரவாத பாகிஸ்தான் தலிபான் குழுவின் முன்னாள் கோட்டையாக இந்த மாகாணம் உள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத குழுவான தெஹ்ரீக்-இ-ஜிகாத் பாகிஸ்தான் அல்லது டிஜேபி - டிடிபியின் ஒரு கிளை என்று நம்பப்படுகிறது . மேலும் அறிக்கையில் இந்த தாக்குதலுக்கு அது பொறுப்பேற்றதுடன், காவல் நிலையத்தில் இருந்த அதிகாரிகளை குறிவைத்தது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பாதுகாப்புப் படையினர் தாராபன் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் உள்ளூர் போலீசாரின் உதவியுடன் அப்பகுதியில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக உளவு அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று கான் கூறினார்.

இராணுவத்திடமிருந்தோ அல்லது அரசாங்கத்திடமிருந்தோ உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. கைபர் பக்துன்க்வாவில் பல கொடிய தாக்குதல்களுடன் வன்முறை அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் பெஷாவரில் உள்ள மசூதியை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 101 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் தலிபான்கள் பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதிலிருந்து கிளர்ச்சியாளர்கள் ஆப்கானிஸ்தானில் வெளிப்படையாக வாழும்போது தைரியமடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

டி.டி.பி. ஒரு தனிக் குழுவாக இருந்தாலும், ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் நெருக்கமாக கூட்டணி வைத்துள்ளது.

தீவிரவாதிகளின் முன்னாள் புகலிடமான தெற்கு வஜீரிஸ்தான் அருகே தேரா இஸ்மாயில் கான் அமைந்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2014-ம் ஆண்டு ராணுவத்தினர் நடத்தி வரும் பள்ளி மீது சிலர் தாக்குதல் நடத்தியதில் பள்ளி மாணவர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்