Lalu Prasad Yadav: தந்தை லாலு பிரசாத்துக்கு கிட்னியை அளித்த மகள் ரோகிணி ஆச்சார்யா மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு
Lalu Yadavs daughter Rohini Acharya: தேஜஸ்வி யாதவ் உட்பட அவரது மூன்று உடன்பிறப்புகள் ஏற்கனவே அரசியலில் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில், ரோகிணி ஆச்சார்யா மக்களவைத் தேர்தலில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகார் முன்னாள் முதல்வர்களான லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி ஆகியோரின் மகள் ரோகிணி ஆச்சார்யா, வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அவரது தந்தை தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) வட்டாரங்களை மேற்கோள் காட்டி என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. ரோகிணி ஆச்சார்யா, தந்தை லாலுவுக்கு சிறுநீரகத்தை தானமாக அளித்தார்.
ஆர்.ஜே.டி எம்.எல்.சி சுனில் குமார் சிங் சமூக ஊடக போஸ்ட்டில், சிங்கப்பூரை தளமாகக் கொண்ட ரோகிணி ஆச்சார்யா அரசியல் அரங்கில் நுழையத் தயாராக உள்ளார் என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
"ரோகிணி ஆச்சார்யா தனது தந்தை மீதான அன்பு, பக்தி மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக திகழ்கிறார்" என்று சிங் ஒரு பேஸ்புக் பதிவில் ஆச்சார்யாவை லாலு பிரசாத் யாதவுடன் குறிப்பிட்டு எழுதினார்.
"சரண் பகுதியைச் சேர்ந்த அனைத்து கட்சி நிர்வாகிகளும் சரண் தொகுதியின் மக்களவை வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்" என்று அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரண் தொகுதியில் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் ராஜீவ் பிரதாப் ரூடி உள்ளார். 2019 பொதுத் தேர்தலில், கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) மாநிலத்தின் 40 மக்களவைத் தொகுதிகளில் 39 இடங்களை வென்றது.
அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவாரா, மாட்டாரா?
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வரும் ரோகிணி ஆச்சார்யா, இதுபோன்ற செய்திகளுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. திங்கள்கிழமை காலை, அவர் தனது சகோதரரும், பீகாரின் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவை புகழ்ந்து எக்ஸ் (முன்பு ட்விட்டர்) இல் பதிவுகளை வெளியிட்டார்.
ரோகிணி ஆச்சார்யா அரசியலுக்கு வந்தால், லாலுவின் நான்காவது அரசியல் வாரிசாக அவர் இருப்பார். தேஜஸ்வி யாதவ் தவிர, தேஜ் பிரதாப் யாதவ் முன்னாள் அமைச்சராகவும், டாக்டர் மிசா பாரதி மாநிலங்களவை எம்.பி.யாகவும் உள்ளனர்.
ரோகிணி ஆச்சார்யா யார்?
எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற இவர், 2002 ஆம் ஆண்டில் தனது தந்தையின் நண்பரான ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி ராய் ரன்விஜய் சிங்கின் மகனான மென்பொருள் பொறியாளர் சம்ரேஷ் சிங்கை மணந்தார். இரண்டு மகன்களுக்கு பெற்றோரான இந்த தம்பதியினர் கடந்த இருபது ஆண்டுகளாக சிங்கப்பூரிலும் அமெரிக்காவிலும் வசித்து வருகின்றனர்.
லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (RJD) தலைவர். அவர் பீகாரின் முன்னாள் முதலமைச்சர் (1990-1997), இந்தியாவின் முன்னாள் ரயில்வே அமைச்சர் (2004-2009), மற்றும் மக்களவையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (MP) ஆவார்.
அவர் பாட்னா பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக அரசியலில் நுழைந்தார் மற்றும் 1977 இல் தனது 29 வயதில் ஜனதா கட்சியின் இளைய மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1990 இல் பீகாரின் முதலமைச்சரானார். அவரது கட்சி 2015 பீகார் சட்டமன்றத் தேர்தலில் JD(U) நிதிஷ் குமாருடன் இணைந்து ஆட்சிக்கு வந்தது. நிதிஷ் ராஜினாமா செய்தவுடன் இந்த கூட்டணி முடிவுக்கு வந்தது மற்றும் ஆர்ஜேடி அகற்றப்பட்டு எதிர்க்கட்சியாக மாறியது.
டாபிக்ஸ்