தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Lalu Yadav: ‘வரும் தேர்தலில் பாஜகவின் முடிவு உறுதியாகிவிட்டது’ லாலு பிரசாத் யாதவ் ஆரூடம்

Lalu Yadav: ‘வரும் தேர்தலில் பாஜகவின் முடிவு உறுதியாகிவிட்டது’ லாலு பிரசாத் யாதவ் ஆரூடம்

Kathiravan V HT Tamil
Jul 31, 2023 07:36 PM IST

”பாபா சாகேப் அம்பேத்கரின் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன”

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்

ட்ரெண்டிங் செய்திகள்

I.N.D.I.A அல்லது ‘Indian National Developmental Inclusive Alliance’ என்பது காங்கிரஸ் உட்பட 26 எதிர்க்கட்சிகளின் குழு. பிரதமர் மோடியின் பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) எதிர்கொள்ளவும், 2024 லோக்சபா தேர்தலில் மத்தியில் மூன்றாவது முறையாக வெற்றி பெறுவதைத் தடுக்கவும் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என பேசிய லாலுபிரசாத் யாதவ், பாபா சாகேப் அம்பேத்கரின் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. பாஜக அழிந்துவிடும். வரும் காலங்களில் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கூடி, அதற்கான வியூகத்தை இறுதி செய்வோம் என லாலு பிரசாத் யாதவ் பேசினார்.

பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் ஜூன் 23ஆம் தேதியன்று பீகார் மாநிலம் பாட்னாவிலும் இரண்டாவது கூட்டம் ஜூலை 17, 18ஆம் தேதிகளில் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் நடைபெற்றது. அடுத்தக் கூட்டத்தை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மூன்றாவது கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்