தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Rajya Sabha : எதிர்க்கட்சிகள் கடும் அமளி - 12 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைப்பு!

Rajya Sabha : எதிர்க்கட்சிகள் கடும் அமளி - 12 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைப்பு!

Divya Sekar HT Tamil
Jul 24, 2023 11:45 AM IST

எதிர்க்கட்சிகள் மக்களவையில் இன்று கடும் அமளியில் ஈடுபட்டநிலையில், 12 மணிக்கு விவாதம் நடத்தலாம் என்று அவைத் தலைவர் அறிவித்தார்.

 கடும் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு
கடும் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு (ANI)

ட்ரெண்டிங் செய்திகள்

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள் மக்களவையில் இன்று கடும் அமளியில் ஈடுபட்டநிலையில், 12 மணிக்கு விவாதம் நடத்தலாம் என்று அவைத் தலைவர் அறிவித்தார்.

இதையடுத்து, மக்களவையில் நடைபெறும் மணிப்பூர் விவகாரம் தொடர்பான விவாதத்துக்கு எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியிருக்கிறார்.

 மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமெழுப்பியதால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபற்று வருகிறது. அதில் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக குறுகிய நேர விவாதத்துக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்கவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டது. ஆனால் இந்த விவகாரத்தில் முதலில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக இருந்தன. இந்த விவகாரத்தில் நேரக் கட்டுப்பாடின்றி அனைத்துக் கட்சிகளும் பேசி விவாதம் நடத்தவும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தின.

இதுதொடர்பாக அமளி நீடித்ததால், கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இரு அவைகளும் எந்த அலுவலையும் கவனிக்காமல் முடங்கின. இந்நிலையில், புதிதாக இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ள எதிர்க்கட்சிகள், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் அறையில் சந்திக்கவும், நாடாளுமன்றத்தில் தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தன. 

அதைத்தொடர்ந்து, இன்று இரு அவைகளிலும் நுழையும் முன்னர், மணிப்பூர் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக்கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. அதன்படி இன்றைய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்