தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Rahul Gandhi: ’Evm இயந்திரங்கள் கருப்பு பெட்டி போன்றது!’ எலான் மஸ்க் ட்விட்டுக்கு ராகுல் காந்தி பதில்!

Rahul Gandhi: ’EVM இயந்திரங்கள் கருப்பு பெட்டி போன்றது!’ எலான் மஸ்க் ட்விட்டுக்கு ராகுல் காந்தி பதில்!

Kathiravan V HT Tamil
Jun 16, 2024 06:09 PM IST

"இந்தியாவில் உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு "கருப்புப் பெட்டி", அவற்றை யாரும் ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. எங்கள் தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை குறித்து தீவிர கவலைகள் எழுப்பப்படுகின்றன" என ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

Rahul Gandhi: ’EVM இயந்திரங்கள் கருப்பு பெட்டி போன்றது!’ எலான் மஸ்க் ட்விட்டுக்கு ராகுல் காந்தி பதில்!
Rahul Gandhi: ’EVM இயந்திரங்கள் கருப்பு பெட்டி போன்றது!’ எலான் மஸ்க் ட்விட்டுக்கு ராகுல் காந்தி பதில்! (AICC)

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் கருத்து கூறி இருந்த நிலையில், ராகுல் காந்தி இந்த கருத்தை தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவிலும் சந்தேகம் கிளப்பும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம்

அமெரிக்காவில், புவேர்ட்டோ ரிக்கோவின் முதன்மைத் தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் அமெரிக்க ஜனாதிபதிக்கான சுயேட்சை வேட்பாளர் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர், ‘எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இடுகைக்கு டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்து இருந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

”மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மனிதர்கள் அல்லது AI மூலம் ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து இன்னும் அதிகமாக உள்ளது,” என்று கென்னடி ஜூனியரின் எலான் மஸ்க் ரீ ட்வீட் செய்து இருந்தார்.

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தை சந்தேகிக்கும் ராகுல் காந்தி

எலான் மஸ்கின் பதிவிற்கு பதிலளித்த ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலில் மும்பை வடமேற்கு தொகுதியில் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிவசேனா- ஏக்நாத் ஷிண்டே பிரிவு வேட்பாளர் ரவீந்திர வைகரின் உறவினர் தொலைபேசியைப் பயன்படுத்துவதாகக் கூறும் செய்தியைப் பகிர்ந்து மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு “கருப்பு பெட்டி” என கூறி உள்ளார்.

 

"இந்தியாவில் உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு "கருப்புப் பெட்டி", அவற்றை யாரும் ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. எங்கள் தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை குறித்து தீவிர கவலைகள் எழுப்பப்படுகின்றன" என ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

எக்ஸ் வலைத்தளத்தில் ராகுல் காந்தி பகிர்ந்த ஒரு இடுகைக்கு 20,000க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்து உள்ளனர். அதே சமயம் 8,000க்கும் மேற்பட்டோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

எலான் மஸ்கிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் பதில்

இதற்கிடையில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் எலான் மஸ்கின் இடுகைக்கு பதிலளித்தார். “பாதுகாப்பான டிஜிட்டல் வன்பொருளை யாராலும் உருவாக்க முடியாது என பொதுமைப்படுத்தி சொல்லப்படும் இந்த கருத்து தவறானது. எலான் மஸ்கின் பார்வை அமெரிக்காவுக்கும், பிற இடங்களுக்கும் பொருந்தும். அங்கு அவர்கள் இணையதள இணைப்புள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை உருவாக்க வழக்கமான கணினி தளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்தியாவில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனிப்பயனாக்கப்பட்டவை, பாதுகாப்பானவை மற்றும் எந்தவொரு நெட்வொர்க் அல்லது ஊடகத்திடம் இருந்தும் தனிமைப்படுத்தப்பட்டவை. புளூடூத், வைஃபை, இணையம் வழியை இதை தொடர்பு கொள்ள முடியாது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இந்தியா செய்தது போல் கட்டமைத்து உருவாக்க முடியும். எலோன் டுடோரியலை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என பதிவிட்டு இருந்தார். ”

 

முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கருத்துக்கு பதில் அளித்த எலான் மஸ்க் “எதையும் ஹேக் செய்யலாம்” என பதில் அளித்து இருந்தார்.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விவாதம் எழுந்துள்ளது அரசியல் களத்தில் முக்கிய பேசு பொருளாகி உள்ளது. 

WhatsApp channel