Modi On Vinesh Phogat Disqualified: ’என் வருத்தத்தை சொல்ல வார்த்தையே இல்லை’ வினேஷ் போகத்திற்கு பிரதமர் மோடி ஆறுதல்!
Modi On Vinesh Phogat Disqualified: ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்து உள்ளார்.
100 கிராம் எடை அதிகரித்ததன் காரணமாக ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் இறுதி போட்டியில் இருந்து இந்திய வீராங்கணை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்த சம்பவம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து இந்திய அணி பதக்கம் வெல்லும் என்ற கனவுடன் காத்திருந்த இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்திய வீராங்கணை தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தங்க பதக்கம் அமெரிக்க வீரங்கனை சாராவுக்கு வழங்கப்படும் என்றும், வெள்ளி பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது என்றும் 2 பேருக்கு வெண்கல பதக்கம் வழங்கப்படும் என்றும் ஒலிம்பிக் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
என்ன நடந்தது?
இன்று காலை 100 கிராம் அளவுக்கு வினேஷ் போகத் உடல் எடை அதிகரித்து காணப்பட்டது. விதிகள் இதை அனுமதிக்காது, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று இந்திய பயிற்சியாளர் கூறி உள்ளார்.
"மகளிர் மல்யுத்த போட்டியில் 50 கிலோ பிரிவில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தியை இந்திய அணி வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறது. இரவு முழுவதும் அணியின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், அவர் இன்று காலை எடை பார்க்கும் ப்பொது 50 கிலோவுக்கு மேல் எடை கொண்டிருந்தார். இந்த நேரத்தில் குழுவினரால் மேற்கொண்டு எந்த கருத்தும் தெரிவிக்கப்படாது. வினேஷின் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்று இந்திய அணி கேட்டுக்கொள்கிறது. கையில் உள்ள போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புகிறது" என இந்திய மல்யுத்த அணி வெளியிட்டு உள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி ஆறுதல்
இந்த நிலையில் வீராங்கனை வினேஷ் போகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்து உள்ளதுடன், அவருக்கு ஆறுதலையும் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக ‘எக்ஸ்’ சமூகவலைதத்தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “வினேஷ், நீங்கள் சாம்பியன்களில் ஒரு சாம்பியன்! நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம். இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது.
நான் அனுபவிக்கும் விரக்தியின் உணர்வை வார்த்தைகள் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அதே சமயம், நீங்கள் நெகிழ்ச்சித்தன்மையை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதை நான் அறிவேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு. வலுவாக திரும்பி வா! நாங்கள் அனைவரும் உங்களுக்காக வேரூன்றி இருக்கிறோம்.” என கூறி உள்ளார்.
ஒலிம்பிக் சங்க தலைவரிடம் மோடி பேச்சு
வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசி உள்ளார். வினேஷ் போகத் முன் உள்ள வாய்ப்புகள் என்ன என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டு அறிந்து உள்ளார்.
மல்யுத்த விளையாட்டு குடும்ப பின்னணி
இந்தியாவின் புகழ்பெற்ற போகத் மல்யுத்த குடும்பத்திலிருந்து வந்தவர் தான் வினேஷ் போகத். தனது உறவினர்களான கீதா போகத் மற்றும் பபிதா குமாரி ஆகியோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி மல்யுத்து விளையாட்டில் தனக்கென தனித்த இடத்தையும் பிடித்துள்ளார்.
மல்யுத்த விளையாட்டை இவருக்கு அறிமுகப்படுத்தியது, இவரது மாமாவும் முன்னாள் மல்யுத்த வீரருமான மகாவீர் சிங் போகத். மல்யுத்தத்த விளையாட்டானது ஆண்களுக்கான விளையாட்டு என கருதிய காலட்டத்தில் பல்வேறு எதிர்ப்பையும் மீறி வினேஷ் போகத்தை களமிறங்கிய மகாவீர் சிங் போகத் வெற்றியும் கண்டார்.
வினேஷ் ஒன்பது வயதாக இருந்தபோது தனது தந்தையின் அகால மரணத்தையும் சமாளிக்க வேண்டியிருந்தது. இந்த சவால்கள் இருந்தபோதிலும், வினேஷ் மல்யுத்த விளையாட்டில் சிறந்த வழிகாட்டுதல்களுடன் வெற்றி நடை கண்டார்.
டாபிக்ஸ்