தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Pm Modi Us Visit Live Updates: பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி!

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.(AFP)

PM Modi US Visit LIVE Updates: பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி!

05:54 PM ISTJun 22, 2023 02:23 PM HT Tamil Desk
  • Share on Facebook
05:54 PM IST

PM Modi in US LIVE Updates: பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு தனது அரசு பயணத்தின் இரண்டாவது நாள் பயணத்தை தொடங்கினார். பின்னர் அவர் வாஷிங்டன் DCக்கு புறப்பட்டார். அங்கு அவர் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி வெளியுறவு செயலாளர் டொனால்ட் லூ நடத்திய பின்னணி விளக்க கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

Thu, 22 Jun 202308:53 AM IST

மோடி-பைடன் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்

Thu, 22 Jun 202308:31 AM IST

ஜில் பிடனுக்கு நான் நன்றி கூறுகிறேன் - மோடி!

இங்கு இளைஞர்கள் மற்றும் படைப்பாற்றல் உள்ளவர்களுடன் பழகுவதற்கான வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 

NSF உடன் இணைந்து இந்தியா பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிகழ்வைத் திட்டமிட்டு ஏற்பாடு செய்ததற்காக  பெண்மணி ஜில் பிடனுக்கு நான் நன்றி கூறுகிறேன்

 -மோடி பேச்சு 

Thu, 22 Jun 202308:14 AM IST

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கான சைவ உணவு பட்டியலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது...

பிரதமர் மோடிக்கான இரவு உணவு பட்டியல்  - வெள்ளை மாளிகை!

தினை தர்பூசணியுடன் grilled corn kernel salad, 

stuffed portobello mushrooms, saffron-infused risotto 

இனிப்பில் ரோஜா மற்றும் ஏலக்காய் கலந்த ஸ்ட்ராபெரி கேக் 

 

 

Thu, 22 Jun 202308:00 AM IST

இந்திய முஸ்லிம் தலைவர் அதிஃப் ரஷீத் பதிலடி!

நரேந்திர மோடி அரசு சிறுபான்மையினரை ஒடுக்குவதாக குற்றம்சாட்டிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் இல்ஹான் ஓமருக்கு இந்திய முஸ்லிம் தலைவர் அதிஃப் ரஷீத் பதிலடி கொடுத்துள்ளார்.

 

Thu, 22 Jun 202307:37 AM IST

ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் யோகா பயிற்சி செய்த பிரதமர் மோடி

 

ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் உள்ள புல்வெளியில் பாய் விரித்து யோகாசனங்களை செய்துள்ளார் பிரதமர் மோடி. இந்திய வம்சாவளியை சேர்ந்த மக்கள் முன்னிலையில் யோகா பயிற்சி மேற்கொண்டார் மோடி.

Thu, 22 Jun 202307:29 AM IST

பிரதமர் மோடி வெள்ளை மாளிகையின் இரவு விருந்தில் பங்கு கொண்டார்.

 

“ பிரதமரின் பங்கேற்பானது நமது இரு நாடுகளுக்கும் இடையேயான அன்பான நட்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது"

 -வெளியுறவு அமைச்சகம் அறிக்கை

Thu, 22 Jun 202307:12 AM IST

முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

பொருளாதாரம், பாதுகாப்பு, இருநாட்டு வணிகம், தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவை குறித்து இரு நாட்டு பிரதமர்களும் ஆலோசனை நடத்துகிறார்கள். இது மட்டுமன்றி ராணுவம், வர்த்தகம் தொடபான முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆக உள்ளதாம்.

Thu, 22 Jun 202307:01 AM IST

பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி!

அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் அவர் 2 ஆவது முறையாக பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 22 Jun 202306:50 AM IST

ஜோ பைடனுக்கு சந்தன பெட்டியை சிறப்பு பரிசாக அளித்த மோடி

இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு சிறப்பு சந்தனமர பெட்டியை பரிசாக அளித்துள்ளார்.

மைசூரில் இருந்து பெறப்பட்டு நுணுக்கமாக வேலபாடுகளுடன் கூடிய இந்த சந்தனப்பெட்டி தாவரங்கள் செதுக்கப்பட்டு, ஜெய்ப்பூரை சேர்ந்த தலைசிறந்த கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் நடந்த இரவு விருந்தின் போது அதிபர் ஜோ பைடனிடம், பிரதமர் மோடி வழங்கினார்.

Thu, 22 Jun 202306:50 AM IST

பைடன் மனைவிக்கு வைர நகை பரிசு!

ஜோ - பைடன் மனைவிக்கு 9.5 கேரட் வைர  நகையை பரிசாகக் கொடுத்தார் பிரதமர் மோடி!

Thu, 22 Jun 202306:35 AM IST

 பிரதமர் மோடி பரிசு!

பத்து முக்கிய உபநிடதங்கள்" என்ற புத்தகத்தை பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பரிசளித்து மகிழ்ந்தார். 

 

Thu, 22 Jun 202306:27 AM IST

பைடனுடன் சிரித்து பேசிய மோடி! 

Thu, 22 Jun 202305:50 AM IST

உயர் மட்ட பேச்சுவார்த்தைக்கு முன்பு அதிபர் பைடனும், பிரதமர் மோடியும் நேரில் சந்தித்து பேசுவார்கள் - வெள்ளை மாளிகை

பாதுகாப்பு மற்றும் விண்வெளி போன்ற துறைகளில் வளர்ந்து வரும் இந்திய அமெரிக்க உறவுகளை மேம்படுத்தும் உயர் மட்ட பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடியும், ஜனாதிபதி ஜோ பைடனும் வெள்ளை மாளிகையில் ஒருவரை ஒருவர் சந்தித்து பேச உள்ளனர்.

குறிப்பாக இந்த பயணம் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் ஆழமான மற்றும் நெருக்கமான உறவை உண்டாக்கும். அமெரிக்க மக்களையும், இந்திய மக்களையும் ஒன்றாக இணைக்கும். நட்பின் பிணைப்புகளை உறுதிப்படுத்தும் என வெள்ளை மாளிகை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Thu, 22 Jun 202305:07 AM IST

பிரதமர் நரேந்திர மோடி வரவிருக்கும் ஹோட்டலுக்கு வெளியே புலம்பெயர்ந்த இந்தியர்கள் கூடி 'பாரத் மாதாகி ஜெய்' என்று கோஷமிட்டனர்

Thu, 22 Jun 202304:41 AM IST

யோகா தின கொண்டாட்டங்களின் சிறப்பம்சங்களை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்

Thu, 22 Jun 202304:40 AM IST

இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டை நினைவு கூறும் வைரப்பரிசு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் மனைவி மற்றும முதல் பெண்மணியுமான ஜில் பைனுக்கு ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட 7.5 கேரட் மதிப்பிலான பச்சை வைரம் ஒன்றை பரிசாக அளித்தார். இது இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டை நினைவு கூறும் வைரப்பரிசு என்று கூறப்படுகிது.

Thu, 22 Jun 202304:35 AM IST

பிடனுக்கு மோடி அளித்த பரிசு பட்டியல் இதோ!

அமெரிக்க அதிபர் பிடனுக்கு மோடி ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு தலைசிறந்த கைவினைஞரால் உருவாக்கப்பட்ட சிறப்பு சந்தனப் பெட்டியை வழங்கினார். அதில்  கொல்கத்தாவைச் சேர்ந்த ஐந்தாம் தலைமுறை வெள்ளித் தொழிலாளிகளின் குடும்பம் கைவினைப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகப் பெருமானின் சிலை மற்றும் ஒரு தியா (எண்ணெய் விளக்கு) பெட்டியில் உள்ளது.

லண்டனைச் சேர்ந்தகிளாஸ்கோ பல்கலை கழகத்தால் அச்சடிக்கப்பட்ட ஃபேபர் அண்ட் ஃபேபர் லிமிடெட் வெளியிட்ட ‘தி டென் பிரின்சிபல் உபநிடதங்கள்’ என்ற புத்தகத்தின் முதல் பதிப்பின் நகலையும் பரிசாக வழங்கினார்.

மேலும் பஞ்சாப் நெய், ஜார்கண்ட் கைத்தறி பட்டுத்துணி, உத்தரகண்ட் அரிசி, மகாராஷ்டிரா இனிப்பு, குஜராத் உப்பு, ராஜஸ்தான் வெள்ளி நாணயம், மேற்குவங்கத்தில் வெள்ளியில் செய்யப்பட்ட தேங்காய் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளன.

Thu, 22 Jun 202303:50 AM IST

அதிபர் பிடனுக்கு பிரதமர் மோடி பரிசு

லண்டனைச் சேர்ந்த ஃபேபர் அண்ட் ஃபேபர் லிமிடெட் வெளியிட்ட ‘தி டென் பிரின்சிபல் உபநிடதங்கள்’ என்ற புத்தகத்தின் முதல் பதிப்பின் நகலை, ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு தலைசிறந்த கைவினைஞரால் உருவாக்கப்பட்ட சிறப்பு சந்தனப் பெட்டியை பிரதமர் மோடி பிடனிடம் வழங்கினார். கொல்கத்தாவைச் சேர்ந்த ஐந்தாம் தலைமுறை வெள்ளித் தொழிலாளிகளின் குடும்பம் கைவினைப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகப் பெருமானின் சிலை மற்றும் ஒரு தியா (எண்ணெய் விளக்கு) பெட்டியில் உள்ளது.

Thu, 22 Jun 202303:49 AM IST

வாஷிங்டன் டிசியில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் முதல் பெண்மணியை பிரதமர் மோடி சந்தித்தார்

Thu, 22 Jun 202303:48 AM IST

பிரதமர் மோடி புதன்கிழமை நியூயார்க்கில் இருந்து வாஷிங்டன் வந்தார்

பிரதமர் மோடி நியூயார்க்கில் இருந்து வாஷிங்டன் வந்தடைந்தார், அங்கு ஐநா அதிகாரிகள், தூதர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட 9வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஐநா தலைமையகத்தில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் முதல் பெண்மணியின் அழைப்பின் பேரில் அவர் ஜூன் 21-24 வரை அமெரிக்க பயணம் சென்றுள்ளார். 

Thu, 22 Jun 202303:47 AM IST

இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தியை அதிகரிக்க மைக்ரானுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்

உற்பத்தியின் விநியோகச் சங்கிலியின் பல்வேறு பகுதிகளில் போட்டித்தன்மை வாய்ந்த அனுகூலங்களை இந்தியா வழங்குவதால், இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தியை அதிகரிக்க அமெரிக்க சிப் தயாரிப்பாளரான மைக்ரான் டெக்னாலஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

செயல்முறை தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட பேக்கேஜிங் திறன்களை மேம்படுத்துவதற்காக அப்ளைடு மெட்டீரியல்களை இந்தியாவிற்கு அவர் அழைத்தார்.