தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Evm: மின்னனு வாக்குப்பதிவு இயந்திர சர்ச்சை! Otp மூலம் கட்டுப்படுத்தப்படுகிறதா? தேர்தல் அதிகாரி புதிய விளக்கம்!

EVM: மின்னனு வாக்குப்பதிவு இயந்திர சர்ச்சை! OTP மூலம் கட்டுப்படுத்தப்படுகிறதா? தேர்தல் அதிகாரி புதிய விளக்கம்!

Kathiravan V HT Tamil
Jun 16, 2024 10:07 PM IST

மும்பை வடமேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திர வைக்கரின் உறவினர் செல்போன் வைத்திருந்ததாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஓடிபி மூலம் கட்டுப்படுத்தியதாகவும் மும்பையை சேர்ந்த செய்தித்தாள் ஒன்று வெளியிட்ட செய்தி வெளியிட்டது பேசு பொருள் ஆனது.

EVM: மின்னனு வாக்குப்பதிவு இயந்திர சர்ச்சை! OTP மூலம் கட்டுப்படுத்தப்படுகிறதா? தேர்தல் அதிகாரி புதிய விளக்கம்!
EVM: மின்னனு வாக்குப்பதிவு இயந்திர சர்ச்சை! OTP மூலம் கட்டுப்படுத்தப்படுகிறதா? தேர்தல் அதிகாரி புதிய விளக்கம்! (HT_PRINT)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை  செல்போன் ஓடிபி மூலம் கட்டுப்படுத்த முடியாது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து உள்ளது. 

சர்ச்சையை கிளப்பிய மும்பை வடமேற்கு தொகுதி

மும்பை வடமேற்கு தொகுதியில் சிவசேனா - ஏக்நாத் ஷிண்டே கட்சியின் வேட்பாளர் ரவீந்திர வைக்கர் வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார்.  இந்த தேர்தலில் சிவசேனா வேட்பாளர் ஏக்நாத் ஷிண்டேவின் ரவீந்திர வைக்கர் மற்றும் உத்தவ் தாக்கரேவின் அமோல் கீர்த்திகர் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்த நிலையில், மகாராஷ்டிராவின் கோரேகானில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்குள் மொபைல் போன் வைத்திருந்ததாக வெற்றி பெற்ற எம்.பியான ரவீந்திர வைக்கரின் உறவினர் மங்கேஷ் பண்டில்கர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 

வெற்றி பெற்ற ரவீந்திர வைக்கரின் உறவினர் செல்போன் வைத்திருந்ததாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஓடிபி மூலம் கட்டுப்படுத்தியதாகவும் மும்பையை சேர்ந்த செய்தித்தாள் ஒன்று வெளியிட்ட செய்தி வெளியிட்டது பேசு பொருள் ஆனது. 

ட்ரெண்டிங் செய்திகள்

நாளிதழில் வெளியான செய்திக்கு மறுப்பு

இந்த நிலையில் நாளிதழில் வெளியான் செய்திக்கு மும்பை வடமேற்கு நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் அதிகாரி வந்தனா சூர்யவன்ஷி மறுப்பு தெரிவித்து உள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், “ மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை மொபைல் ஓடிபி மூலம்  கட்டுப்படுத்தும் அளவுக்கான வயர்லெஸ் தகவல் தொடர்பு திறன்களை பெற்று இருக்கவில்லை. சில கட்சிகள் இது குறித்து தவறான கருத்துக்களை தெரிவிக்கின்றனர்” என கூறி உள்ளார்.  

மும்பை வடமேற்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளரின் உதவியாளர் அனுமதியின்றி மொபையில் போனை பயன்படுத்தினார் என்றும் தேர்தல் அதிகாரி கூறி உள்ளார்.  . இது தொடர்பாக தேர்தல் அதிகாரி ஏற்கனவே கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். 

மின்னணு வாக்குப்பதிவு இயந்தரங்கள் கம்பி அல்லது வயரெல்ஸ் இணைப்பு இல்லாத சாதனங்கள் என்றும், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வெளிப்படையாகவே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.  

நாளிதழ் செய்தியை மேற்கொள் காட்டிய ராகுல் காந்தி 

முன்னதாக மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் பதிவிட்டிருந்த இடுகைக்கு பதில் அளித்து இருந்த ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலில் மும்பை வடமேற்கு தொகுதியில் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிவசேனா- ஏக்நாத் ஷிண்டே பிரிவு வேட்பாளர் ரவீந்திர வைகரின் உறவினர் தொலைபேசியைப் பயன்படுத்துவதாகக் கூறும் செய்தியைப் பகிர்ந்து மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு “கருப்பு பெட்டி” என கூறி இருந்தார். 

"இந்தியாவில் உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு "கருப்புப் பெட்டி", அவற்றை யாரும் ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. எங்கள் தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை குறித்து தீவிர கவலைகள் எழுப்பப்படுகின்றன" என ராகுல் காந்தி கூறினார். 

எக்ஸ் வலைத்தளத்தில் ராகுல் காந்தி பகிர்ந்த ஒரு இடுகைக்கு 20,000க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்து உள்ளனர். அதே சமயம் 8,000க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்து இருந்தனர்.