National Space Day 2024 : இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம்! கருப்பொருள் மற்றும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை!-national space day 2024 indias first national space day theme and what you need to know - HT Tamil ,தேசம் மற்றும் உலகம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  National Space Day 2024 : இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம்! கருப்பொருள் மற்றும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை!

National Space Day 2024 : இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம்! கருப்பொருள் மற்றும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை!

Priyadarshini R HT Tamil
Aug 23, 2024 05:19 AM IST

National Space Day 2024 : இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதன் கருப்பொருள், முக்கியத்துவம் மற்றும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை என்ன பாருங்கள்.

National Space Day 2024 : இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம்! கருப்பொருள் மற்றும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை!
National Space Day 2024 : இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம்! கருப்பொருள் மற்றும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை!

2024ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதியான இன்று இந்திய தனது முதல் தேசிய விண்வெளி தினத்தை கொண்டாடுகிறது. இந்த நாளில் கடந்த ஆண்டு, சந்திரயான் – 3 வெற்றிகரமாக தனது விக்ரம் லேண்டரை, நிலவில் தரையிறக்கியது.

இந்த நாள் இந்தியாவின் வரலாற்று சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நிலவில் ரோவரை இறக்கும் உலகின் 4வது நாடாக இந்தியா உள்ளது. நிலவின் தெற்குப்பகுதிக்கு அருகில் கால்வைத்த முதல் நாடாக இந்தியா உள்ளது.

நிலவு மிஷனில் பெரிய வெற்றியடைந்ததை கொண்டாடும் வேளையில், இந்திய அரசு அலுவல் ரீதியான தனது தேசிய விண்வெளி தினத்தை ஆகஸ்ட் 23ம் தேதி கொண்டாடுகிறது. விண்வெளித்துறையில் இந்தியாவின் வளர்ச்சியை இது சுட்டிக்காட்டுகிறது.

சந்திரயான் சாதனை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், விக்ரம் லேண்டரை, 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி, நிலவின் தெற்குப்பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கியதன் மூலம், ஒரு மைல்கல் வரலாற்று சாதனையை நிறைவேற்றியுள்ளது. உலகிலேயே இந்தியாதான் நிலவின் தென்துருவத்தில் கால்வைத்த முதல் நாடு, நிலவில் கால் வைத்த 4வது நாடு என்ற பெருமையை பெறுகிறது.

விக்ரம் லேண்டருடன், பிரஞ்யான் ரோவரும் சென்றது. இவையிரண்டும் நிலவில் தரையிறங்கியது, இந்திய விண்வெளி முயற்சிகளில் ஒரு முக்கிய சாதனையாகக் பார்க்கப்படுகிறது.

சந்திரயான் – 3, ஆந்திரா பிரதேசதம் ஸ்ரீஹரிக்கோட்டவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது. இந்த வரலாற்று சாதனையை இஸ்ரோ நிகழ்த்திக்காட்டியதை பிரதமர் மோடி பாராட்டி, அந்த நாளை தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடினார். மக்கள் மகிழ்ச்சியுடன் இந்த நாளை சிறப்பாகக் கொண்டாடினர்.

இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியை இந்த நாள் பிரதிபலிக்கிறது. மேலும் சர்வதேச விண்வெளி ஆய்வுகளுடன் இந்தியா கைகோர்க்க வேண்டியதையும் சுட்டிக்காட்டுகிறது.

தேசிய அறிவியல் தினத்தின் முக்கியத்துவம்

விண்வெளி ஆய்வு மற்றும் ஆராய்ச்சியில் இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை தேசிய விண்வெளி தினம் கொண்டாடுகிறது. சர்வதேச விண்வெளி ஆய்வுகளில், சந்திரயான் – 3 வெற்றி, இந்தியா ஒரு முக்கிய விண்வெளி ஆராய்ச்சியாளர் என்று மட்டும் நிரூபிக்கவில்லை, இஸ்ரோ அறிவியலாளர்களின், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பையும் காட்டுகிறது.

விண்வெளி ஆராய்ச்சியில், இந்தியாவின் திறனை காட்டு மைல்கல்லான சந்திரயான் – 3, விடாமுயற்சி, புதிய கண்டுபிடிப்புகள், துல்லியமான அணுகுமுறை ஆகியவற்று உதாரணமாகவும், இந்த நாள் வரும் தலைமுறையை அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங் மற்றும் கணிதத்தில் தங்களின் எதிர்காலத்தை உருவாக்கிக்கொண்டு, இந்தியாவின் எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு பங்களிக்க வலியுறுத்துகிறது.

இந்தியாவின் முதல் விண்வெளி தினத்தின் கருப்பொருள்

இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினத்தின் கருப்பொருள், ‘நிலவைத்தொடும் வேளையில், வாழ்வைத் தொடுவது – இந்தியாவின் விண்வெளி சரித்திரம்’ என்பதாகும்.

சந்திரயான் 4 மற்றும் 5

இந்த கொண்டாட்ட வேளையில் மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங்கின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது. சந்திரயான் – 3 என்பது மைல்கல், 4 மற்றும் 5 வருகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் மேலும் கூறுகையில், இந்தியாவில் இருந்து முதல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்பும் ஞான்யான் மிஷனும் 2025ம் ஆண்டு வெற்றியடையும். இதன் மூலம் விண்வெளித்துறையில் இந்தியா உலகின் தலைவராகும் முயற்சியும் அதிகரிக்கும் என்றார்.

தனியாருடன் சேரும்போது, இந்தியா விண்வெளித்துறைக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி முதலீடு கிடைக்கும் என்றும், 2035க்குள் பாரத விண்வெளி நிலையத்தை அமைப்பதும், 2045க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பி ஆராய்சசி மேற்கொள்வதும், எதிர்கால திட்டங்களாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த நாளில் என்ன நடக்கிறது?

இந்தியாவின் முதல் விண்வெளி தின கொண்டாட்டத்தை பல்வேறு ஊடகங்கள் வழியாக பார்க்கலாம். இஸ்ரோ, இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. உரையாடல், அறிவியலாளர்கள் கலந்துரையாடல் மற்றும் மாணவர்களைக் கவரும் வகையில் கல்வி வழிகாட்டி ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இது விண்வெளி ரசிகர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இந்த நாளில் இந்தியாவின் வரலாற்று சாதனையை கொண்டாடவும், இந்தியாவின் விண்வெளி பயணம் மறறும் எதிர்கால மைல்கற்களைக் கொண்டாடவும் வாய்பாக அமைகிறது. நீங்கள் இஸ்ரோவின் யூடியூப் சானலில் அதன் நிகழ்வுகளை பார்த்து மகிழலாம்.

Watch live streaming on,

 

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.