Tamil Debut Director: பெரியம்மா வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்..! சினிமாவாக்கிய அறிமுக இயக்குநர்
பெரியம்மா வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து சினிமாவக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி. ஊர்வசி நடித்து இவர் இயக்கிய ஜே பேபி படம் இந்த ஆண்டில் கவனம் ஈர்த்த படமாக உள்ளது.

இந்த ஆண்டில் வெளியான அறிமுக இயக்குநர்களின் தமிழ் படங்களில் கவனம் ஈர்த்த படமாக ஊர்வசி பிரதான கதாபாத்திரத்தில் நடித்து, சுரேஷ் மாரி இயக்கத்தில் வெளியான ஜே பேபி படம் உள்ளது. பேமிலி டிராமா பாணியில் உருவாகியிருந்த இந்த படத்தில் நடிகை ஊர்வசி ஒன் உமன் ஷோ நிகழ்த்தியிருப்பார். நடிப்பு ராட்சசியாக ஜே பேபி என்ற கேரக்டரில் வாழ்ந்திருப்பார். படம் வெளியான பின்பு அவரது நடிப்புக்கு வெகுவாக பாராட்டுகளும் குவிந்தன.
இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், லொள்ளு சபா மாறன் போன்ற மிகவும் குறைவான அறிந்த முகங்களே நடித்திருப்பார்கள். மற்றவர்கள் அனைவரும் புதுமுகங்களாகவும், ரியல் லைஃப் கேரக்டர்களாகவும் இருப்பார்கள். பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன் இந்த படத்தை தயாரித்தது
உண்மை கதை
கணவன் மறைவு, பெற்ற மகன்களுக்கு இடையே பிரிவு என குடும்ப சூழ்நிலையால் மனஉளைச்சலுக்கு ஆளாகும் ஊர்வசி, அக்கம் பக்கத்தினருக்கு பிரச்னை ஏற்படுத்தும் சில விஷயங்களை செய்கிறார். பின்னர் காணாமல் போகும் அவர் கொல்கத்தாவில் இருப்பது தெரியவர, மகன்கள் அவரை அங்கிருந்து மீட்டு வருவது தான் படத்தின் கதை.