TRADITIONAL SAREES: மதுரை சுங்கடிச் சேலை முதல் சேலம் வெண்பட்டு வரை..பாரம்பரியத்தை பறைசாற்றும் சேலைகளின் சுவாரஸ்யம்!-interesting facts about madurai sungudi saree kanchipuram silk sarees salem saree and others - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Traditional Sarees: மதுரை சுங்கடிச் சேலை முதல் சேலம் வெண்பட்டு வரை..பாரம்பரியத்தை பறைசாற்றும் சேலைகளின் சுவாரஸ்யம்!

TRADITIONAL SAREES: மதுரை சுங்கடிச் சேலை முதல் சேலம் வெண்பட்டு வரை..பாரம்பரியத்தை பறைசாற்றும் சேலைகளின் சுவாரஸ்யம்!

Karthikeyan S HT Tamil
Aug 22, 2024 06:48 PM IST

TRADITIONAL SAREES: தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் மதுரை சுங்கடிச் சேலை, காஞ்சிபுரம் பட்டு, கோயம்புத்தூர் கோராப்பட்டு, ஆரணி பட்டு, சேலம் வெண்பட்டு ரகங்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.

TRADITIONAL SAREES: மதுரை சுங்கடிச் சேலை முதல் சேலம் வெண்பட்டு வரை..பாரம்பரியத்தை பறைசாற்றும் சேலைகளின் சுவாரஸ்யம்!
TRADITIONAL SAREES: மதுரை சுங்கடிச் சேலை முதல் சேலம் வெண்பட்டு வரை..பாரம்பரியத்தை பறைசாற்றும் சேலைகளின் சுவாரஸ்யம்!

மதுரை சுங்கடிச் சேலை

மதுரையின் பாரம்பரிய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிப்பவை சுங்குடி சேலை. பருத்தி இழைகளுடன் பட்டுச் ஜரிகை இழைகளையும் சேர்த்து நெய்யப்படுவதே சுங்கடி. ஆண்டுதோறும் பிப்ரவரி 8 ஆம் தேதி சுங்கடி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மதுரை பகுதிகளில் 10,000 க்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாக சுங்கடிச் சேலை உள்ளது.

காஞ்சிபுரம் பட்டு

காஞ்சிபுரத்தில் பட்டுச் சேலைகள் 'கோர்த்து வாங்கும் முறை, கோர்த்து வாங்காத சாதாரண வாட் முறை' என இரண்டு முறைகளில் நெய்யப்படுகின்றன. பட்டுச் சேலைகளில் பயன்படுத்தப்படும் ஜரிகையின் தரம்தான் சேலையின் தரம். பெரும்பாலான காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளில் இருபுறமும் ஜரிகை பார்டர் இருக்கும், ஜரிகை பார்டர் இரண்டு முதல் எட்டு அங்குலம் அகலம் கொண்டதாக இருக்கும். காஞ்சிவரம் பட்டுப்புடவைகள் முழுக்க மல்பெரி பட்டு நூலினால் செய்யப்படுகிறது. இது தென்னிந்திய பட்டுப் புடவையாகும். சேலை மற்றும் முந்தியை தனியே நெய்து சேர்ப்பது இங்குள்ள வழக்கம். காஞ்சிவரம், காஞ்சிபுரம், காஞ்சி பட்டு புடவைகள் அனைத்தும் ஒரே புடவையின் மாறுபாடுகள்.

கோயம்புத்தூர் கோராப்பட்டு

எளிய மக்களின் கெளரவ ஆடையாக கருதப்படுகிறது கோயம்புத்தூர் கோராப்பட்டு. பட்டுக்கூட்டினை வேக வைக்காமல் அப்படியே நூலாக்கி அதன்மூலம் நெய்ப்படும் பட்டும், காட்டனும் இணைந்து தயாரிக்கப்படுவது தான் கோராப்பட்டு. பெரிய பெரிய டிசைன் பட்டுச்சேலைகள் தான் கோவை கோராப்பட்டுச் சேலைகளின் சிறப்பம்சம் ஆகும். தென்னகத்தின் காலநிலைக்கு ஏற்ற விதத்தில் இருப்பதால் இது பெண்களால் மிகவும் ஆர்வத்துடன் வாங்கப்படுகிறது.

ஆரணி பட்டு

1970-கள் வரை ஆரணிப்பட்டுப் புடவைகள் என்றாலே, அது "டாபி பட்டுச்சேலை" என்ற ஒரிழை பட்டுச்சேலைகள்தான். 70-களில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி காரணமாக தமிழகத்தில் நடுத்தர வர்க்கத்தினரிடம் மேல்தட்டு மக்கள் அணிந்த பட்டுச் சேலையை உடுத்த வேண்டும் என்ற விருப்பம் வந்தது. நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்ட காஞ்சிபுரம் பட்டுச்சேலைகளின் விலை அதிகம், எடையும் கூடுதலாக இருக்கும். காஞ்சிபுரம் பட்டுச்சேலைகளில் இருக்கும் டபுள் சைட் (மேலும் கீழும்) பார்டரைப் போலவே கோர்வை எனப்படும் பட்டுச்சேலைகள் ஆரணியில் உருவாக்கப்பட்டன.

சேலம் வெண்பட்டு

சேலம் விவசாயிகளால், மல்பரி செடி பயிரிடப்பட்டு வெண்பட்டு, மஞ்சள் பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. காவிரி நீர் மூலம் சலவை செய்யப்படுவதாலும், இப்பகுதி சூழல் காரணமாகவும் சீன பட்டுநூலைக் காட்டிலும் சேலம் பட்டு நூலுக்கு அதிக வெண்மை கிடைக்கிறது. இங்குள்ள வேட்டிகள் சீனாவுக்கே விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், திருப்பதி ஏழுமலையானுக்கும் சேலம் பட்டு வேட்டிகளே அனுப்பி வைக்கப்படுகின்றன.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.