TODAY RASIPALAN: (23.08.2024): இன்று நாள் எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய முழுபலன்கள்!
TODAY RASIPALAN, DAILY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 23) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
TODAY RASIPALAN, DAILY HOROSCOPE: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வீடு மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். விவசாய பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈர்ப்பு அதிகரிக்கும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும்.
ரிஷபம்
சகோதர, சகோதரிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் மேம்படும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். நண்பர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.
மிதுனம்
வியாபாரத்தில் மந்தநிலை ஏற்பட்டாலும் கூட்டாளிகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை தரும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும்.
கடகம்
உத்தியோகப் பணிகளில் மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். உயர்கல்வியில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்மம்
குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவும் போது சிந்தித்துச் செயல்படவும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வர்த்தகப் பணிகளில் முதலீடுகளை குறைத்துக் கொள்ளவும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும்.
கன்னி
நிர்வாகத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் திறமை வெளிப்படும். வாக்குவன்மை மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
துலாம்
மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை தரும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் ஏற்படும். வியாபாரம் நிமித்தமான கடன் உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்
குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். கலை துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள்.
தனுசு
உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப தனது கருத்துகளை முன்வைப்பீர்கள்.
மகரம்
உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வழக்கு விஷயங்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும்.
கும்பம்
வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தாமதமும் படிப்படியாக குறையும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றங்கள் ஏற்படும்.
மீனம்
உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். தற்பெருமை பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவது நல்லது. பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். சிந்தனைப்போக்கில் குழப்பம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.
டாபிக்ஸ்