Modi oath event: மாலத்தீவு முதல் வங்கதேசம் வரை! மோடியின் பதவியேற்பு விழாவுக்கு வரும் உலகத் தலைவர்கள் பட்டியல் இதோ!
Modi swearing-in ceremony: 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்து உள்ள நிலையில் வரும் ஞாயிற்று கிழமை இரவு 7:15 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாகளுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு உள்ளிட்ட 7 அண்டை நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்து உள்ள நிலையில் வரும் ஞாயிற்று கிழமை இரவு 7:15 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாகளுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
’அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’
பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அண்டை நாடுகளின் தலைவர்களை அழைத்து உள்ளோம். இது "அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை (Neighbourhood First)" கொள்கை மற்றும் ”சாகர் (SAGAR)” எனப்படும் பிராந்தியத்தில் அனைவருக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி பார்வைக்கு இந்தியா அளித்த மிக உயர்ந்த முன்னுரிமையாக இது ஏற்பாடு செய்து உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கும் தலைவர்கள்!
இந்த விழாவில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, செஷல்ஸ் துணை அதிபர் அகமது அபிப், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல், பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்பதைத் தவிர, அண்டை நாட்டு தலைவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அளிக்கும் விருந்திலும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய பெருங்கடல் நாடுகள் உடனான ஒத்துழைப்பு
வங்காளதேசம், பூட்டான், நேபாளம், மாலத்தீவு, மொரிஷியஸ், சீஷெல்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் தலைவர்களை அழைக்கும் முடிவின் பின்னணியில் இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” கொள்கையும், இந்தியப் பெருங்கடல் நாடுகளுடனான ஒத்துழைப்பில் கவனம் செலுத்துவது ஆகிய முக்கிய காரணிகள் உள்ளதாக ஏற்கெனவே கடந்த செவ்வாய் என்று இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெள்யிட்டு இருந்தது.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையின் முக்கிய பயனாளியாக வங்க தேசம் உள்ளது. சாலை, ரயில் மற்றும் எரிசக்தி இணைப்பை அதிகரிக்க பில்லியன் டாலர்கள் மதிப்பிலான உதவியைப் அந்நாடு பெற்றுள்ளது. மேலும் வங்கதேச பிரதமர் ஹசீனா கடந்த ஜனவரி மாதம் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சீனாவுக்குச் செல்வதற்கு முன் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், மோடியின் பதவியேற்பு விழாவில் ஹசீனா பங்கேற்பதால், முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தபடி, அவர் இந்தியாவிற்கு ஒரு முழு அளவிலான இருதரப்புப் பயணத்தை மேற்கொள்ள வாய்ப்பில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
ஜூன் நடுப்பகுதியில் ஈத்-உல்-அஷா விடுமுறை நாட்களில் பங்களாதேஷ் பிரதமரால் பயணம் செய்ய முடியாது. பின்னர் அவர் பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஈடுபடுவார் என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாலத்தீவில் ’இந்தியாவே வெளியேறு’ என்ற பிரச்சாரத்தின் பின்னணியில் இருந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அழைக்கப்பட்ட அண்டை நாட்டு தலைவர்கள் பட்டியலில் மாலத்தீவு அதிபர் முய்ஸு முக்கியத்துவம் வாய்ந்தவராக பார்க்கப்படுகிறார்.