Modi Cabinet: '4 இலாக்காகளுக்கு No சொன்ன பாஜக! நாயுடுவுக்கு 4! நிதிஷுக்கு 2!’ இதுதான் மோடியின் அமைச்சரவை!
Narendra Modi oath: மோடியின் அமைச்சரவையில் நான்கு முதல் ஐந்து எம்.பி.க்களுக்கு ஒரு கேபினட் அமைச்சர் மற்றும் இரண்டு எம்.பிக்களுக்கு ஒரு இணை அமைச்சர் என்ற அடிப்படையில் கூட்டணி கட்சிகளுக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நரேந்திர மோடி இன்று தேசிய தலைநகரில் நடைபெறும் மெகா நிகழ்வில், வெளிநாட்டு பிரமுகர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மூன்றாவது முறையாக பதவியேற்கிறார். உறுதி செய்யப்படாத தகவல்களின்படி, ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விழாவில் சுமார் 30 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என கூறப்படுகின்றது.
மோடி பதவியேற்பு விழாவில் உலகத் தலைவர்கள்
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவு அதிபர் மொஹமட் முய்சு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹால், பூடான் பிரதமர் ஷேரிங் தோப்கா உள்ளிட்ட 8000 பேர் கலந்துகொள்வார்கள். மற்றும் சீஷெல்ஸ் துணைத் தலைவர் அகமது அஃபிஃப். இந்தியாவின் அண்டை நாடு முதல் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த வெளிநாட்டு பிரமுகர்களை புது தில்லி அழைத்துள்ளது.
மோடியின் அரசியல் வாழ்கையில் கூட்டணி ஆட்சிக்கு அவர் தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களை மட்டுமே பெற்று உள்ளதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் ஆதரவை பாஜக பெற்று உள்ளது.