PM Modi Oath: 3வது முறையாக இன்று பிரதமராக பதவியேற்கிறார் மோடி.. புதிய அமைச்சரவையில் யார், யாருக்கு வாய்ப்பு?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Pm Modi Oath: 3வது முறையாக இன்று பிரதமராக பதவியேற்கிறார் மோடி.. புதிய அமைச்சரவையில் யார், யாருக்கு வாய்ப்பு?

PM Modi Oath: 3வது முறையாக இன்று பிரதமராக பதவியேற்கிறார் மோடி.. புதிய அமைச்சரவையில் யார், யாருக்கு வாய்ப்பு?

Karthikeyan S HT Tamil
Jun 10, 2024 11:54 AM IST

Modi oath: நரேந்திர மோடி பதவிப்பிரமாணம்: அமைச்சரவையில் பாஜக முக்கிய இலாகாக்களை வைத்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Modi Oath: 3வது முறையாக இன்று பிரதமராக பதவியேற்கிறார் மோடி.. புதிய அமைச்சரவையில் யார், யாருக்கு வாய்ப்பு?
Modi Oath: 3வது முறையாக இன்று பிரதமராக பதவியேற்கிறார் மோடி.. புதிய அமைச்சரவையில் யார், யாருக்கு வாய்ப்பு?

முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா, பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே, செஷல்ஸ் துணை அதிபர் அகமது அபிப் உள்பட 8,000 பேர் பங்கேற்கின்றனர். இந்தியாவின் அண்டை நாடு முதலில் என்ற கொள்கையின் ஒரு பகுதியாக இந்த வெளிநாட்டு பிரமுகர்களுக்கு புது தில்லி அழைப்பு விடுத்துள்ளது.

கூட்டணி அரசு

பிரதமர் மோடியின் அரசியல் வாழ்க்கையில் முதல் முறையாக அவர் கூட்டணி அரசை வழிநடத்துவார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவை பாஜக பெற்றுள்ளது. நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் கட்சிகள் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகளை வென்றுள்ளன. இந்த இரு கட்சிகளும் மோடி அரசாங்கத்தின் 3.0-க்கு ஆதரவளித்துள்ளன.  எனவே இந்த இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யார், யாருக்கு வாய்ப்பு?

இன்று 30 அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திரபாபு நாயுடுவின் கட்சிக்கு 4 இலாகாக்களும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு 2 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ராம் மோகன் நாயுடு, ஹரிஷ் பாலயோகி, டக்குமல்லா பிரசாத் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்பு உள்ளது. .

நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் அமைச்சரவை பதவிக்கு லாலன் சிங் மற்றும் ராம்நாத் தாக்கூர் ஆகியோரின் பெயர்களை முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகிறது. தாகூர் பாரத ரத்னா விருது பெற்றவரும், சோசலிச ஐகானுமான கர்பூரி தாக்கூரின் மகன் ஆவார்.

முன்னதாக, 16 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சி, 4 இலாகாக்கள், சபாநாயகர் பதவி கேட்டதாக கூறப்படுகிறது. 12 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட ஐக்கிய ஜனதா தளம் 2 கேபினட் இலாகாக்களைக் கோரியது.

உள்துறை, பாதுகாப்பு, நிதி, வெளியுறவுத்துறை ஆகிய நான்கு பெரிய துறைகளை விட்டுக்கொடுக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக இல்லை என்று பல தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில்வே, சாலை போக்குவரத்து, சட்டம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வி போன்ற வேறு சில முக்கிய அமைச்சகங்களும் பாஜக வசமே இருக்கும் என கூறப்படுகிறது. 

5 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற எல்ஜேபி-பாஸ்வானின் சிராக் பாஸ்வானுக்கும் அமைச்சரவை வாய்ப்பு கிடைக்கக்கூடும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.