தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Manipur Violence: மத்திய அரசுக்கு எதிராக 2 நம்பிக்கை இல்லா தீர்மானம்!

Manipur Violence: மத்திய அரசுக்கு எதிராக 2 நம்பிக்கை இல்லா தீர்மானம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 26, 2023 10:47 AM IST

இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் வழங்கப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல், கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட சுமார் எம்.பிக்கைள் கையெழுத்திட்டு தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. திமுக இந்த தீர்மானத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்றம்
தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் (REUTERS)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரஸ் எம்.பியும் மக்களவை துணை தலைவருமான கவுரவ் கோகாய் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளர்.

மேலும் பி.ஆர்.எஸ் கட்சி சார்பில் நமா நாகேஸ்வராவும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.

மணிப்பூர் பழங்குடி பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச்செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் நம்பிக்கை இல்ல தீர்மான சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் தெலுங்கானா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தெலுங்கான மாநிலத்தை தாழ்மை படுத்தும் வகையில் இந்த மத்திய அரசு செயல் பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மத்திய அரசு மீது பி.ஆர்எஸ் கட்சி சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் வழங்கப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல், கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட சுமார் எம்.பிக்கைள் கையெழுத்திட்டு தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. திமுக இந்த தீர்மானத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

அதே சமயம் பி.ஆர்.எஸ் கட்சி சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக பிரதமர் மோடி, மணிப்பூரில் நடைபெற்ற சம்பவம் எந்த நாகரீக சமூகத்துக்கும் அவமானகரமானது. மணிப்பூரில் பெண்கள் அவமதிக்கப்பட்ட சம்பவம், இந்தியாவிலுள்ள 140 கோடி மக்களையும் அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது. மணிப்பூரின் மகள்களுக்கு ஏற்பட்டதை மன்னிக்கவே முடியாது. எந்த குற்றவாளிகளும் தப்பமாட்டார்கள் என நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்