தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Pm Modi: மணிப்பூர் சம்பவம்.. கொடூரத்தால் இதயம் கனக்கிறது - பிரதமர் மோடி

PM Modi: மணிப்பூர் சம்பவம்.. கொடூரத்தால் இதயம் கனக்கிறது - பிரதமர் மோடி

Karthikeyan S HT Tamil
Jul 20, 2023 11:31 AM IST

மணிப்பூர் சம்பவத்தால் இதயம் கனக்கிறது என்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில், மணிப்பூர் சம்பவத்தால் இதயம் கனக்கிறது என்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, மணிப்பூர் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்ப மாட்டார்கள் என்று நான் நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன். மணிப்பூரின் பெண்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது. வலியாலும், கோபத்தாலும் என் இதயம் நிறைந்திருக்கிறது. மணிப்பூரில் நடந்த சம்பவம் நம் சமுதாயத்திற்கு வெட்கக்கேடானது.

அனைத்து மாநில முதல்வர்களும் மாநில சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக பெண்களின் பாதுகாப்புக்கு வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நிறைவேற்றப்படும் சட்டங்களை ஆரோக்கியமான விவாதங்கள் மேலும் வலுவாக்கும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இதனிடையே மணிப்பூர் சம்பவத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் பெண்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரத்தை ஏற்க முடியாது என்றும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றம் தலையிடும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்