தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Petrol Diesel Prices Cut: தேர்தல் எதிரொலி! பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது மத்திய அரசு! எவ்வளவு தெரியுமா?

Petrol Diesel Prices Cut: தேர்தல் எதிரொலி! பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது மத்திய அரசு! எவ்வளவு தெரியுமா?

Kathiravan V HT Tamil
Mar 14, 2024 09:39 PM IST

“சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ரூபாய்க்கும், டீசல் விலை 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்”

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த விலை குறைப்பு நாளை (மார்ச் 15) காலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ரூபாய்க்கும், டீசல் விலை 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.

இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு நுகர்வோர் செலவினத்தை குறைக்கும் என தெரிவித்துள்ளது.

நாட்டில் இயங்கி வரும் 6 கோடி டீசல் கார்கள் மற்றும் 27 கோடி இருசக்கர வாகனங்கள் மற்றும் 58 லட்சத்திற்கும் அதிகமான கனரக சரக்கு வாகனங்களின் இயக்க செலவுகளை குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை குறைப்பின் மூலம் ஏற்படும் நன்மைகள் என கீழ்கண்டவற்றையும் பெட்ரோலியத்துறை அமைச்சகம் பட்டியல் இட்டுள்ளது.

● வருமானம் மிச்சம் ஆகுதல்

சுற்றுலா மற்றும் பயணத் தொழில்களுக்கு ஊக்கம்.

● பணவீக்கத்தின் மீதான கட்டுப்பாடு.

● போக்குவரத்தைச் சார்ந்த வணிகங்களுக்கான செலவு குறைவது.

● தளவாடங்கள், உற்பத்தி மற்றும் சில்லறை வணிகத் துறைகளுக்கான மேம்பட்ட லாபம் ஏற்படுதல்.

● டிராக்டர் மற்றும் பம்ப் செட்களுக்கு விவசாயிகள் செய்ய வேண்டிய செலவு குறைதல்

ஆகிய நன்மைகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை குறைப்பை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பாராட்டு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ’எக்ஸ்’ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவரது பதிவில்,  பெட்ரோல், டீசல் விலையை  ரூபாய் 2 வரை குறைத்ததன் மூலம், நாட்டின் தலைசிறந்த பிரதமர் நரேந்திரமோடி  அவர்கள் கோடிக்கணக்கான இந்தியர்களைக் கொண்ட தனது குடும்பத்தின் நலனும் வசதியும் எப்போதும் தனது இலக்கு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் என கூறி உள்ளார். 

மேலும், உலகம் இக்கட்டான காலங்களில் சென்று கொண்டிருந்த போது - வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் பெட்ரோல் விலை 50-72 சதவீதம் அதிகரித்தது மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பல நாடுகளில் பெட்ரோல் கிடைக்காமல் போனது. 

1973ஆம் ஆண்டுக்கு பிறகு ஐம்பது ஆண்டுகளில், மிகப்பெரிய எண்ணெய் நெருக்கடி இருந்தபோதிலும், மோடியின் தொலைநோக்கு மற்றும் உள்ளுணர்வு தலைமையால் அவரது குடும்பம் பாதிக்கப்படவில்லை. இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிப்பதற்கு பதிலாக கடந்த இரண்டரை ஆண்டுகளில் 4.65 சதவீதம் குறைந்துள்ளது. 

இந்தியாவில் எரிபொருள் விநியோகம் நிலையானது, மலிவு விலையில் இருந்தது மற்றும் பசுமை எரிசக்தியை நோக்கி எங்கள் படிகள் தொடர்ந்தன. அதாவது, ஆற்றல் கிடைக்கும் தன்மை, கட்டுப்படியாகக்கூடிய தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை இந்தியா பராமரித்து வந்தது. 

இந்தியாவில் மட்டும்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்காமல், குறைந்துள்ளது. எங்கெல்லாம் எங்கள் நாட்டு மக்களுக்காக எண்ணெய் வாங்க முடியுமோ அங்கெல்லாம் எண்ணெய் வாங்கினோம். மோடி பிரதமராவதற்கு முன், 27 நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்தோம், ஆனால், அவரது தலைமையில், குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவை நம் நாட்டு மக்களுக்கு வழங்குவதற்காக இந்த நோக்கத்தை விரிவுபடுத்தி, இப்போது 39 நாடுகளில் இருந்து எண்ண்எய் வாங்குகிறோம். 

அது அன்று ஆனால் இன்றும் பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் விலையை பாருங்கள்!

மார்ச் 14, 2024 அன்று, ரூபாய் மதிப்பில், இந்தியாவில் பெட்ரோல் லிட்டருக்கு சராசரியாக  94 ரூபாய் ஆனால் இத்தாலியில்  168.01 ரூபாய், அதாவது இந்தியாவை விட 79% அதிகம்.

பிரான்சில் 166.87 ரூபாய் அதாவது இந்தியாவை விட 78% அதிகம்; ஜெர்மனியில் 159.57 ரூபாய் அதாவது இந்தியாவை விட 70% அதிகம், ஸ்பெயினில் 145.13 ரூபாய் அதாவது இந்தியாவை விட 54% அதிகம்!

மேலும் டீசல் விலையை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியாவின் சராசரி 87 ரூபாய் என்றால், இத்தாலியில் 163.21 ரூபாய் அதாவது இந்தியாவை விட 88% அதிகம்; பிரான்சில் 161.57 ரூபாய் அதாவது இந்தியாவை விட 86% அதிகம்; ஜெர்மனியில் 155.68 ரூபாய் அதாவது இந்தியாவை விட 79% அதிகம் மற்றும் ஸ்பெயினில் 138.07 ரூபாய் அதாவது இந்தியாவை விட 59% அதிகம்!

உலகம் முழுவதும் என்ன நடந்தாலும், மோடி ஜியின் தலைமையில், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும், ஒவ்வொரு குடிமகனுக்கும் எரிபொருள் விநியோகம் அப்படியே இருப்பதை உறுதி செய்வதே எங்களின் சிறந்த முயற்சியாகும். 

ஒவ்வொரு அடுப்பும் எரிந்து கொண்டே இருக்கிறது, ஒவ்வொரு வாகனமும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. முன்னேற்றத்தின் வேகம் ஒருபோதும் நிற்காது. பற்றாக்குறையும், தடங்கலும் இருக்கக்கூடாது. இன்றும் செங்கடலில் நெருக்கடி ஏற்பட்டாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சற்று நிவாரணம் கிடைத்தவுடன், பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்து அவரது குடும்பத்திற்கு மற்றொரு பரிசை வழங்கினார். .

இது மட்டுமின்றி, பிரதமர் மோடி நவம்பர் 2021 மற்றும் மே 2022ல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை இரண்டு முறை குறைத்து, வாட் வரியை குறைத்து பாஜக ஆளும் மாநிலங்கள் இந்த நிவாரணத்தை நேரடியாக மோடியின் குடும்பத்திற்கு வழங்குவதை உறுதி செய்தார். இன்றும் பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் பிற மாநிலங்களுக்கும் இடையே பெட்ரோல் விலையில் சுமார் 15 ரூபாய்க்கும், டீசல் விலையில் 11 ரூபாய்க்கும் வித்தியாசம் உள்ளது.

முதல் இரண்டு விலை குறைப்புகள் மூலம் கலால் வரியை குறைத்த பிறகு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 ரூபாயும், டீஅல் விலை லிட்டருக்கு 15 ரூபாயும் குறைக்கப்பட்டது என பதிவிட்டுள்ளார். 

IPL_Entry_Point