தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  International Sex Workers Day 2023: Let's Raise Our Voices For The Rights Of Sex Workers On This Day!

International Sex Workers Day 2023 : பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம் இந்த நாளில்!

Priyadarshini R HT Tamil
Jun 02, 2023 06:15 AM IST

International Commercial Sex Workers day 2023 : தங்களின் கொடுமையான அவல வாழ்க்கைக்கு தீர்வு காண வேண்டும் எனும் கோரிக்கை உள்ளிட்ட பல வாழ்வியல் உரிமைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தினார்கள். எட்டு நாட்களுக்கு பின் அந்த தேவாலயத்தில் நுழைந்த பிரான்ஸ் நாட்டு காவல்துறை அவர்களை அப்புறப்படுத்தியது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

தங்களின் கொடுமையான அவல வாழ்க்கைக்கு தீர்வு காண வேண்டும் எனும் கோரிக்கை உள்ளிட்ட பல வாழ்வியல் உரிமைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தினார்கள். எட்டு நாட்களுக்கு பின் அந்த தேவாலயத்தில் நுழைந்த பிரான்ஸ் நாட்டு காவல்துறை அவர்களை அப்புறப்படுத்தியது.

ஆனாலும் பாலியல் தொழிலாளர்களுக்கான சில உரிமைகள் அளிக்கப்பட்டன. அந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் தான் இந்த நாளில் பாலியல் தொழிலாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சாதாரண பெண்களுக்கே இங்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் பாலியல் தொழிலாளர்களின் நிலை எப்படியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. அவ்வளவு துன்புறுத்தலுக்கு ஆளாகும் அவர்களை வன்கொடுமைகளிலிருந்து காப்பாற்ற நினைக்கவும், அவர்களுக்காக குரல் கொடுக்கவும், போராடவும், அவர்களைக்குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும்வேண்டும்.

உலகின் பல நாடுகளில் பாலியல் தொழில் அனுமதியுடனேயே நடக்கிறது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. நமது நாட்டில் கூட பாலியல் தொழில் செய்வது குற்றம் என்று சட்டத்தில் இல்லை. உடலுறவுக்கு ஒருவரை அழைப்பதே குற்றம். அப்படியிருக்கையில் அதிகார வர்க்கம் முதற்கொண்டு பொதுமக்கள் வரை இவர்களை இழிக்காதவர்களும், தாக்காதவர்களும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார். உயிர்க்கொல்லி நோய்கள் தாக்கும் அபாயம் இருந்தும், இவர்கள் இந்த தொழில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் அல்லது ஈடுபடுகிறார்கள் என்றால், அதற்கான காரணங்களை நாம் உணர முடியும்.

பாலியல் தொழிலை தொடர்ந்து அனுமதிக்க காரணங்கள் உள்ளது. இந்த உலகில் புலி, பூனை, மண்புழு என எந்தவொரு உயிரும் மனிதன் வாழ முக்கியம். அதில் எந்த உயிர் இல்லாவிட்டாலும் அதுவும் மனிதனின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். இன்று பாலியல் தொழிலாளிகள் என்று ஒதுக்கப்படும் இவர்கள் இல்லை என்றால் குடிப்பழக்கத்திற்கும், போதைப்பழக்கத்திற்கும் ஆளான, ஆண்களின் வக்கிர வடிகால் விபரீத விளைவுகளை உருவாக்கும் என்பதால் இந்த பாலியல் தொழிலை அனுமதிக்க வேண்டியுள்ளது.

அமெரிக்காவில் பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் டிசம்பர் 17ம் தேதி ‘பாலியல் தொழிலாளர்களுக்கெதிரான வன்கொடுமை எதிர்ப்பு தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. ஐரோப்பாவில் இதற்கென அமைப்புகள் பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகின்றன.

சிவப்புக் குடை சின்னம் பாலியல் தொழிலாளர்களின் வன்கொடுமைக்கு எதிரான சின்னமாக கடைபிடிக்கப்படுகிறது. பாலியல் தொழிலாளர்கள் மீது அக்கறை செலுத்தி, அவர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுப்போம்.

இந்தாண்டு சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தினத்தில், பாலியல் தொழிலையும் ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும். இந்தத்தொழில் உலகின் பழமையான தொழில். பாலியல் தொழிலாளர்களை மரியாதையாக நடத்த வேண்டும். சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தினம் உரிமைகளையும், இந்த தொழிலாளர்களுக்கு நல்ல பணிசூழலையும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பது இந்தாண்டு இந்த நாளின் கருப்பொருளாகும்.

இந்தியாவின் பிரபல ‘ரெட் லைட்‘ ஏரியாக்கள்

பாலியல் தொழில் என்பது மிகவும் மோசமான, இந்திய கலாசாரத்துக்கு எதிரான செயலாகப் பார்க்கப்படுகிறது. நம் நாட்டில் மறைமுகமாக அங்கீகரிக்கப்பட்ட, பாலியல் தொழில் நடக்கும் இடங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் சில இடங்களில் இந்த பாலியல் தொழில் அங்கு வாழும் மக்களுக்கான பிரதான வருமானமாக இருக்கிறது.

உலகின் பல்வேறு இடங்களைப் போலவே இந்தியாவிலும் பாலியல் தொழில் மூலம் மிகப்பெரும் வருமானம் ஈட்டும் இடங்களும் உள்ளன.

கொல்கத்தாவின் சோனாகச்சி, மும்பையின் காமத்திப்புரம், இந்தியாவின் இரண்டாவது பெரிய சிவப்பு விளக்குப் பகுதி இந்த காமத்திப்புரம் தான். இங்கு வசிக்கும் பெண்களில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பெண்களால் அப்பகுதியில் ஒரு பீடி சுற்றும் தொழில் நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. 

1980களில் ஹாஜி மஸ்தான், தாவூத் இப்ராகிம் ஆகியோர் இந்த காமத்திப்புரத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக இருந்துள்ளனர். புத்வார், புனே, மீர்கஞ்ச், அலகாபாத், ஜி.பி. ரோடு, டெல்லி ஆகிய இடங்களில் இந்தியாவில் பரவலாக பாலியல் தொழில் நடைபெற்று வருகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்