Independence Day 2024 : ‘இன்னுயிர் தந்தவர்களை வணங்குகிறேன்’ செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி உரை!
Independence Day 2024 : இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றி வருகிறார்.

Independence Day 2024 : இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றி வருகிறார். பிரதமர் மோடி இன்று தனது 11 வது சுதந்திர தின உரையை ஆற்றி வருகிறார். 2024 மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் ஆற்றும் முதல் சுதந்திர தின உரை இதுவாகும்.
சுதந்திர தின கருப்பொருள்
இந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கான கருப்பொருள் 'விக்சித் பாரத் @ 2047'. 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை இந்த கொண்டாட்டங்கள் சித்தரிக்கும் என்று ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையின் கோட்டை கொத்தளத்திலிருந்து தேசத்திற்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான தனது கனவு நாட்டின் 140 கோடி மக்களின் தீர்மானம் மற்றும் கனவுகளின் பிரதிபலிப்பாகும் என்றார்.