புளோரிடாவை புரட்டிபோட்ட மில்டன் சூறாவளி..16 பேர் உயிரிழப்பு! பாதிப்பு பகுதிகளுக்கு செல்லும் பைடன்
அமெரிக்காவில் புளோரிடா மாகணத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய மில்டன் சூறாவளிக்கு இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். சூறாவளிக்கு விவகாரத்தில் எழுந்திருக்கும் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் புளோரிடாவுக்கு செல்ல இருக்கிறார் ஜனாதிபதி ஜோ பைடன்.
அமெரிக்காவில் புளோரிடா மாகணத்தில் வீசி வரும் மில்டன் சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது, புளோரிடாவில் தற்போது மில்லியன் கணக்கான மக்கள் இன்னும் மின்சாரம் இல்லாமல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிகங்கள் இன்னும் மின்சாரம் இல்லாமல் உள்ளன. மேலும் அசுரத்தனமான இந்த சூறாவளி காரணமாக சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
எட்டு மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு
மில்டன் சூறாவளி காரணமாக புளோரிடாவில் எட்டு மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளன. செயிண்ட் லூசியா மாவட்டத்தில் 6, வோலூசியா மாவட்டத்தில் 4, பினெல்லாஸ் மாவட்டத்தில் 2, ஹில்ஸ்பரோ, போல்க், ஆரஞ்சு மற்றும் சிட்ரஸ் மாவட்டத்தில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
சூறாவளியால் பல்வேறு பகுதிகளில் மின் கம்பிகள் சாய்ந்தது. அங்கிருக்கும் பிரபல தம்பா பேஸ்பால் மைதானத்தின் மேற்கூரை துண்டாகி வீடுகளை மூழ்கடித்தது.
சரசோட்டாவில், சுமார் 100 வாகனங்கள் எரிபொருளைப் பெற வரிசையில் நின்றன. மற்றவர்கள் ஜெர்ரி கேன்களுடன் கால் கடுக்க வரிசையில் பொறுமையாக காத்திருந்தனர்.
கடுமையான சேதம்
வெள்ளை மாளிகை மாநாட்டில், ஜனாதிபதி ஜோ ஃபைடன், சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய 50 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதையடுத்து அமெரிக்க ஜானதிபதி பைடன் சூறாவளி பாதித்த பகுதிகளுக்கு சென்று நாளை பார்வையிட இருக்கிறார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஹெலீன் சூறாவளி அரசியல் ரீதியாக விமர்சனம் எழுந்தது.
ஃபெடரல் அரசுக்கு போதுமான நிதியுதவி வழங்கப்படுகிறதா என்ற கவலைகளுக்கு மத்தியில், காங்கிரஸின் முயற்சிகளை முடுக்கிவிடுமாறு ஜனாதிபதி பைடன் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக சிறு வணிகர்களுக்கு உதவுவதில் முனைப்பு காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தொடரும் மீட்பு பணிகள்
சூறாவளியாக பாதிக்கப்பட்டோரின் தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சுமார் 1,600 பேர் மீட்கப்பட்டிருப்புது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வியத்தகு முறையில் மீட்புப் பணியில், கடலோரக் காவல்படை மெக்சிகோ வளைகுடாவில் குளிரூட்டியில் ஒட்டிக்கொண்டு கடலுக்கு 30 மைல் (48 கிலோமீட்டர்) தொலைவில் சூறாவளியில் சிக்கி கொண்ட படகுத் உரிமையாளரை காப்பாற்றியது.
மில்டன் சூறாவளியின் போது அடித்துச் செல்லப்பட்ட அந்த நபர், அமெரிக்க கடலோரக் காவல்படைக்கு உதவி கோரிய நிலையில் அவர்கள் அந்த நபர் மீட்டனர். இதுதொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது
மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம் மில்டன் சூறாவளியை ஈரமாகவும், காற்றாகவும் மாற்றியதாக காலநிலை வல்லுநர்கள் தெரிவித்தனர். உலக வானிலை பண்புக் குழுவின் கூற்றுப்படி, இந்த சூறாவளி வகை 2 ஆக இருந்திருக்கும். ஆனால் காலநிலை காரணிகளால் மிகவும் அழிவுகரமான வகை 3 ஆக வளர்ந்தது கடுமையன பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
சூறாவளி தம்பா விரிகுடா பகுதியின் சில பகுதிகளில் அதிக மழையை கொட்டியுள்ளது. இது 1,000 ஆண்டுகளில் ஒரு முறை நடக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. புளோரிடாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவ பல தேசிய மற்றும் உள்ளூர் அமைப்புகள் நன்கொடைகளை ஏற்றுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
டாபிக்ஸ்