பிரெட்டி சூறாவளிக்கு மலாவி நாட்டில் 326 பேர் பலி
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  பிரெட்டி சூறாவளிக்கு மலாவி நாட்டில் 326 பேர் பலி

பிரெட்டி சூறாவளிக்கு மலாவி நாட்டில் 326 பேர் பலி

Priyadarshini R HT Tamil
Mar 18, 2023 08:14 AM IST

Malavi Affected : பிரெட்டிசூறாவளியால்மலாவிநாட்டில் 326 பேர் பலியாகிஉள்ளனர். அத்துடன் மேலும் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

இதனால், பெருவெள்ளம் ஏற்படும். பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு காற்றின் வேகம் இருக்கும் என அதுபற்றிய மலாவியின் இயற்கை வளங்கள் மற்றும் பருவகால மாற்றங்களுக்கான அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை எச்சரித்து இருந்தது. 

இதற்கேற்ப சூறாவளி புயலால் கடந்த 4 நாட்களாக பரவலாக பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், மலாவியில் பிரெட்டி சூறாவளி புயலுக்கு 326 பேர் உயிரிழந்து உள்ளனர் என ஐ.நா.வுக்கான மனிதநேய விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தி தெரிவிக்கிறது.

மேலும் சூறாவளியால் 5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1.8 லட்சம் பேர் புலம்பெயர்ந்து சென்று உள்ளனர் என தெரிவித்து உள்ளது. தொடர்ந்து நிலைமை இன்று மோசமடையக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. சூறாவளியால், எண்ணற்ற பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகள் மற்றும் பாலங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. 

இதேபோல் பல இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளது. நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது என அந்த துறைக்கான ஆணையாளர் சார்லஸ் கலேம்பா கூறியுள்ளார். தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. எனினும், பிரெட்டி சூறாவளியின் அடுத்தடுத்த தாக்கத்தினால், வெள்ளம் உள்ளிட்ட காரணிகளால் 5.1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

மொசாம்பிக் நகரில் மட்டுமே 3.4 லட்சம் பேர் பாதிப்படைந்து உள்ளனர் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கிறது. காலரா உள்ளிட்ட நோய் பரவலுக்கான எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. மக்கள் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 

இதுபோன்ற இயற்கை பேரிடர்களை சமாளிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தயார் நிலையில் நாம் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் இடர் காலங்களில் அவை நமக்கு உதவும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.