Donald Trump: சட்டவிரோத குடியேற்றம் குறித்த டொனால்ட் டிரம்பின் கருத்துக்கள்: வெள்ளை மாளிகை கண்டனம்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Donald Trump: சட்டவிரோத குடியேற்றம் குறித்த டொனால்ட் டிரம்பின் கருத்துக்கள்: வெள்ளை மாளிகை கண்டனம்

Donald Trump: சட்டவிரோத குடியேற்றம் குறித்த டொனால்ட் டிரம்பின் கருத்துக்கள்: வெள்ளை மாளிகை கண்டனம்

Manigandan K T HT Tamil
Dec 18, 2023 10:18 AM IST

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புலம்பெயர்ந்தோர் மீதான சர்ச்சை கருத்துக்களை தெரிவித்ததற்காக வெள்ளை மாளிகை விமர்சித்தது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (AP Photo/Godofredo A. Vásquez)
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (AP Photo/Godofredo A. Vásquez) (AP)

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரூ பேட்ஸ் வெளியிட்ட ஓர் அறிக்கையில், “பாசிஸ்டுகள் மற்றும் வன்முறை வெள்ளை மேலாதிக்கவாதிகளின் கோரமான சொல்லாட்சியை எதிரொலிப்பதும், அரசாங்கத்துடன் உடன்படாதவர்களை ஒடுக்குவோம் என்று அச்சுறுத்துவதும் அனைத்து அமெரிக்கர்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளை மீதானா தாக்குதல் ஆகும், நமது ஜனநாயகம் மற்றும் பொதுமக்கள் மீதான ஆபத்தான கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

2024 குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான முன்னணிப் போட்டியாளரான டொனால்ட் டிரம்ப், நியூ ஹாம்ப்ஷயரின் டர்ஹாமில் சனிக்கிழமை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் இந்தக் கருத்தை தெரிவித்தார். அவர், தெற்கு அமெரிக்க எல்லையில் கட்டுப்பாடற்ற குடியேற்றம் நிகழ்வதாக விமர்சித்தார்.

மேலும், "அவர்கள் எங்கள் நாட்டிற்கு - ஆப்பிரிக்காவிலிருந்து, ஆசியாவிலிருந்து - உலகம் முழுவதும் வருகிறார்கள்," என்று டிரம்ப் கூறினார்.

முன்னதாக சனிக்கிழமை மாலை, டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் ஒரு போஸ்ட்டில், "சட்டவிரோத குடியேற்றம், நம் தேசத்தின் இரத்தத்தை விஷமாக்குகிறது" என்று தெரிவித்த கருத்து சர்ச்சைக்குள்ளானது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

 

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.