பிர்சா முண்டா பிறந்தநாள் இன்று.. பழங்குடி மக்களின் குரல்.. பிரிட்டிஷ் படைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்..யார் இவர்?
அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் படையால் இந்தியாவில் பழங்குடி மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலை இருந்து வந்தது. அதைத் துணிச்சலோடு எதிர்த்துப் போராடினார் பிர்சா முண்டா.

மனித சமூகம் இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு தான் வளர்ச்சி அடைந்திருந்தாலும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரம் என்பது இன்னும் பெரிதாக முன்னேற்றம் காணப்படவில்லை என்பதே நிதர்சனம். குறிப்பாக, பழங்குடி இனமக்களின் வாழ்வாதாரம் என்பது இன்னும் மேம்படவில்லை. அவர்கள் தங்கள் வாழ்வில் சந்தித்து வரும் சவால்களும் இன்னல்களும் இன்றும் ஏராளம் என்றே கூறலாம்.
முறையான சாலைவசதி, கல்விக்கூடம், படிப்பறிவு இல்லாமல் இன்னும் பல கிராமங்கள் நாடு முழுவதும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படிப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே போராடியவர் தான் பிர்சா முண்டா. அநீதிக்கு எதிரான பழங்குடி மக்கள் உரிமைப் போராட்டத்தின் முதல் குரலாகவும் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தார் பிர்சா முண்டா. வெறும் 25 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த பிர்சா முண்டா பழங்குடி மக்களால் 'மண்ணின் மைந்தன்' என்று அழைக்கப்பட்டார்.
யார் இந்த பிர்சா முண்டா?
கடந்த 1875 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி பீகார் மாநிலத்தில் அன்றைய பெங்கால் பிரசிடென்சியில் இருந்த உலிஹதி என்ற கிராமத்தில் சுக்ணா முண்டா, கர்மி ஹட்டு முண்டா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் பிர்சா. 'பிர்சா' என்றால் வியாழன், 'முண்டா' என்றால் ஆதிவாசி என்று அர்த்தம்.அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் படையால் இந்தியாவில் பழங்குடி மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலை இருந்து வந்தது. அதைத் துணிச்சலோடு எதிர்த்துப் போராடினார் பிர்சா முண்டா.