World's Indigenous People Day : உலக பழங்குடியின சர்வதேச மக்களின் தினத்தை ஏன் கடைபிடிக்க வேண்டும் என தெரியுமா?-worlds indigenous peoples day do you know why the worlds indigenous peoples day should be observed - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  World's Indigenous People Day : உலக பழங்குடியின சர்வதேச மக்களின் தினத்தை ஏன் கடைபிடிக்க வேண்டும் என தெரியுமா?

World's Indigenous People Day : உலக பழங்குடியின சர்வதேச மக்களின் தினத்தை ஏன் கடைபிடிக்க வேண்டும் என தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Aug 09, 2024 07:19 AM IST

World's Indigenous People Day : உலக பழங்குடியின சர்வதேச மக்களின் தினத்தை ஏன் கடைபிடிக்க வேண்டும் என தெரிந்கொள்ளுங்கள்.

World's Indigenous People Day : உலக பழங்குடியின சர்வதேச மக்களின் தினத்தை ஏன் கடைபிடிக்க வேண்டும் என தெரியுமா?
World's Indigenous People Day : உலக பழங்குடியின சர்வதேச மக்களின் தினத்தை ஏன் கடைபிடிக்க வேண்டும் என தெரியுமா?

இந்த நாளை ஐ.நா. சபை உலக பழங்குடியின மக்களின் நாளாக 1994ம் ஆண்டு முதல் கடைபிடித்து வருகிறது. அந்த நாளில், சிறப்பு நிகழ்வுகள், மாநாடுகள் மற்றும் கூட்டங்கள் என உலகம் முழுவதும் நடத்துகிறது.

உலகின் பழங்குடியின மக்கள் என்பவர்கள் யார்?

ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது பகுதியில் முதன்முதலில் அதாவது ஆதியில் இருந்தே வசித்தவர்கள் என்று பொருள். அந்த இடத்தில் அந்த குழுவினர் தான் முதலில் சமூகமாக வாழத்துவங்கிய உண்மையான மக்கள் ஆவார்கள். மற்றவர்கள் அங்கு வருவதற்கு முன்பிருந்தே அந்த இடத்தில் வசித்தவர்கள் என்பது பொருள். பின்னாளில் மற்றவர்கள் அந்த இடத்தை பிடித்துக்கொண்டார்கள் அல்லது காலனி ஆதிக்கத்தை செலுத்த துவங்கினார்கள்.

இப்போது 90 நாடுகளில் 350க்கும் மேற்பட்ட மில்லியின் பழங்குடியின மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் இன்று உலகம் முழுவதிலும், 5,000 மேற்பட்ட பல்வேறு கலாச்சாரங்களைப் பின்பற்றுகிறார்கள். 1,000க்கும் மேற்பட்ட மொழிகளை பேசுகிறார்கள். பழங்குடியின மக்களுக்கு தனித்துவமான நம்பிக்கைகள், கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் இருந்தது. பழங்குடியின மக்கள் மண் சார்ந்தவர்களாகவும், இயற்கை சூழ்ந்தவர்களாகவும் வசித்தார்கள்.

அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?

பழங்குடியின மக்கள், அவர்கள் வாழ்ந்த சமூகத்தில் ஆதிக்க குழுக்களாக இல்லை. பின்னர் வந்தவர்களே ஆதிக்கம் செலுத்தினார்கள். அதற்கு, அவர்களிடம் இல்லாத பொருளாதார சக்தி, சமூக பாதுகாப்பு மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை இல்லாததால், பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டார்கள் என்று பொருள்.

உலக மக்கள்தொகையில் 5 சதவீதம் மட்டுமே பழங்குடியின மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் உலகில் 15 சதவீதம் அளவுக்கு ஏழைகளாக இம்மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கான சுகாதாரம் மற்றும் கல்வி வசி குறைவாகவே வழங்கப்பட்டது.

பழங்குடியின மக்கள் மற்ற பழங்குடியினர் அல்லாத மக்களைவிட குறைவான வாழ்க்கையே வாழ்கிறார்கள். அவர்களின் மொழிகள் பள்ளிகளில் கற்பிக்கப்படுவதில்லை. அவர்களின் மொழிகளில் பல அழிவு நிலையில் உள்ளன. ஒவ்வொரு இரு வாரத்திற்கு ஒரு பழங்குடியின மொழி காணாமல் போவதாக கணிக்கப்பட்டு உள்ளது.

பழங்குடியின மக்களுக்கு அவர்களின் நிலத்தை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவில்லை. எனவே அரசு மற்றும் பல்வேறு நிறுவனங்களும், அந்த நிலத்தை மரங்களை வெட்டவும், மாடு வளர்க்கவும் அல்லது பல்வேறு நடவடிக்கைகளுக்காக எடுத்துக்கொள்கிறார்கள்.

இது அந்தப் பழங்குடியின மக்கள், அவர்களின் நிலத்தை விட்டு அகலவும், அவர்களின் மூதாதையர்களின் நிலத்தை இழக்கவும், அவர்களின் செல்வம் மற்றும் உணவை இழக்கவும் காரணமாகிறது.

என்ன நடந்துள்ளது?

அண்மையில் நியூசிலாந்தில் உள்ள உள்ளூர் மயோரி பழங்குடியின மக்கள், தங்களின் நிலத்தின் வழியாக செல்லும் ஆற்றை சட்டரீதியாக போராடி பாதுகாத்தார்கள். அந்த புதிய சட்டம் ஆற்றை பாதுகாத்தது. ஈக்வெடாரில் உள்ள வாராணியின மக்கள் வரலாற்று ரீதியிலான சட்ட போராட்டத்தை நடத்தி வென்றனர். எண்ணெய் நிறுவனங்கள் சுரங்கம் அமைக்க விழைந்த அமேசான் மழைக்காடுகளின் 5 லட்சம் ஏக்கர் நிலத்தை வெற்றிகரமாக காப்பாற்றி, அங்கு சுரங்கம் அமைக்கப்படுவதை நிறுத்தினர்.

அவர்கள் நிலத்தின் மீது பழங்குடியின மக்களுக்கு, உரிமை உள்ளது. இது மனித உரிமைகள் சம்மந்தப்பட்ட விஷயம். இந்த பூமிக்கு இது சுற்றுச்சூழல் நன்மைகளையும் கொண்டு வருகிறது. பொலிவியா, பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில், உலகின் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான வனங்களில் காடழிப்பின் அளவு இரண்டு முதல் மூன்று மடங்கு குறைவாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஐநாவின் 2007ம் ஆண்டு பிரகடனத்தின்படி, பழங்குடியின மக்களின் உரிமையில் அவர்களுக்கு முன்னேற்றம் கிடைத்துவருகிறது. இதை உலகின் 148 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. அவர்கள் தங்கள் மூதாதையர்களின் நிலத்தை பயன்படுத்தவும், பாதுகாக்கவும் உரிமை உள்ளது என்பதை அந்த பிரகடனம் வலியுறுத்துகிறது.

இது மேலும் பல உரிமைகளையும் கொடுக்கிறது. பழங்குடியின மக்களின் கல்வி, சுகாதாரம், அரசியல் மற்றும் சட்ட விஷயங்களில் கலந்துகொள்வது, அவர்களின் பாதுகாப்பு என அனைத்தையும் வலியுறுத்துகிறது.

மேலும் என்ன செய்யவேண்டும்?

இத்தனை உரிமைகள் இருந்தும், உலகளவில் அவர்களின் நிலங்களை அவர்கள் சிறிய அளவில் மட்டுமே சட்ட ரீதியாக சொந்தமாகக் கொண்டுள்ளனர். ஐநாவின் நகர்வு முக்கியமானது எனினும், உலக நாடுகள் அதில் சரியாக நடக்கவேண்டும். அதில் கையெழுத்திட்ட நாடுகள், அவர்கள் கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். உலகம் முழுவதிலும் பழங்குடியின மக்கள், அவர்களின் உரிமை, காடழிப்பு மற்றும் பருவநிலை மாற்றத்துக்காக போராடிக்கொண்டே இருக்கிறார்கள். அதன் ஒருபகுதியாகத்தான் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.