தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Hbd Kumaraswamy Pulavar: பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றிய அ.குமாரசாமி புலவர் பிறந்த நாள்

HBD Kumaraswamy Pulavar: பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றிய அ.குமாரசாமி புலவர் பிறந்த நாள்

Manigandan K T HT Tamil
Jan 18, 2024 06:00 AM IST

இவர் ஆங்கிலத்தில் அடிப்படை புலமை அடைந்த பின்பு, இவரை ஆங்கில பாடசாலையை விட்டு விலக்கிய இவரது தந்தையார், சுண்ணாகம் முருகேச பண்டிதரிடம் இவரை தமிழ் கல்வி பயிலுமாறு அனுப்பினார்.

தமிழறிஞர் அ. குமாரசாமிப் புலவர்
தமிழறிஞர் அ. குமாரசாமிப் புலவர்

ட்ரெண்டிங் செய்திகள்

சுன்னாகம் குமாரசுவாமி புலவர் அம்பலவாணர் மற்றும் சிதம்பரம்மை ஆகியோருக்கு ஜனவரி 18, 1854 இல்  மகனாகப் பிறந்தார். புலவர் ஐந்தாவது வயதில் நமசிவாய தேசிகரிடம் தமிழ் கற்கத் தொடங்கி மல்லாகம் ஆங்கிலப் பள்ளியிலும் படிக்கத் தொடங்கினார். 8 வயதில் முருகாசு பண்டிதரிடம் தமிழ் இலக்கியம் கற்கத் தொடங்கினார்.

இலக்கிய இலக்கணங்களை தமது பெரிய தகப்பனாராகிய முத்துக்குமாரக் கவிராயரிடம் கற்றுத் தேறியவர். அத்துடன் சைவ சமய ஈடுபாடும் கொண்டவர். தென்கோவை குமாருடையார் மகள் சிதம்பராம்மை என்பவரை 1840 வைகாசி ஐந்தாம் நாள் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் முறையே சிவகாமிப்பிள்ளை, குமாரசுவாமி மற்றும் காமாட்சிப்பிள்ளை என மூன்று மகவுகளைப் பெற்றனர். 1854 ஆம் ஆண்டு தை 18 ஆம் நாள் குமாரசுவாமி பிறந்தார்.

இவர் ஆங்கிலத்தில் அடிப்படை புலமை அடைந்த பின்பு, இவரை ஆங்கில பாடசாலையை விட்டு விலக்கிய இவரது தந்தையார், சுண்ணாகம் முருகேச பண்டிதரிடம் இவரை தமிழ் கல்வி பயிலுமாறு அனுப்பினார்.

முருகேச பண்டிதரிடம் தமிழ்க் கல்வி கற்ற காலத்தே இவருடன் கூட கல்வி கற்றவருள் குறிப்பிடத்தக்கவர்கள் ஊரெழு சு. சரவணமுத்துப்புலவர், மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, சுண்ணாகம் மு. வைத்தியநாதபிள்ளை போன்றோர் ஆவர்.

இவர் மாணவராக இருந்த போது, சொல்லும் பொருளும் சுவைபட பாடுவதிலும், கட்டுரை எழுதுவதிலும், சொற்பொழிவு ஆற்றுவதிலும் திறமை பெற்றிருந்தமையால் இவரைப் புலவர் என்று பட்டப் பெயரால் அழைத்தனர். இப்பட்டப் பெயரே இவருக்கு பிற்காலத்தில் இயற்பெயராகிற்று என்று புலவரது மாணவராகிய புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் செய்யுள் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

உடல்நலக் குறைவால் 1922 மார்ச் 23 அதிகாலை மூன்றரை மணியளவில் உயிர் துறந்தார் குமாரசாமிப் புலவர்.

WhatsApp channel

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.