தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Shiv Nadar University: நொய்டா பயங்கரம்: சக மாணவியை சுட்டு கொலை செய்த மாணவன் தானும் தற்கொலை

Shiv Nadar University: நொய்டா பயங்கரம்: சக மாணவியை சுட்டு கொலை செய்த மாணவன் தானும் தற்கொலை

Pandeeswari Gurusamy HT Tamil
May 19, 2023 11:15 AM IST

Noida Crime:அனுஜ் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து, நேகாவை சரமாரியாக சுட்டான். பின் அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டான். நேராகத் தன் விடுதி அறைக்குச் சென்று கதவைப் பூட்டிக்கொண்டான். சில நிமிடங்களில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்

கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது  (HT Photo)
கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது (HT Photo) (HT_PRINT)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப் பல்கலைக்கழகத்தில் மூன்றாவது ஆண்டு படிக்கும் அனுஜ் என்ற மாணவர் கான்பூரை சேர்ந்தவர். தன்னுடன் படிக்கும் நேகா மாணவியுடன் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாணவி நேகாவுடன் சாப்பிடும் அறைக்கு வெளியில் நின்று அனுஷ் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒருவருக்கொருவர் கட்டியணைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் அந்த நேரத்தில் திடீரென அனுஜ் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து, நேகாவை சரமாரியாக சுட்டான். பின் அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டான். நேராகத் தன் விடுதி அறைக்குச் சென்று கதவைப் பூட்டிக்கொண்டான். சில நிமிடங்களில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்.

அதையடுத்து, அங்கிருந்த சக மாணவர்கள் இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அனுஜுக்கு எப்படித் துப்பாக்கி கிடைத்தது என்பது குறித்தும் விசாரித்துவருகின்றனர்.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்