தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Italy: என்னது ஒரு வீட்டின் விலை 90 ரூபாயா? - உண்மை மக்களே!

Italy: என்னது ஒரு வீட்டின் விலை 90 ரூபாயா? - உண்மை மக்களே!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 02, 2023 10:17 PM IST

இத்தாலி நாட்டின் ஒரு வீட்டின் விலை 90 ரூபாய் என அந்த நாட்டு அரசு அறிவித்தது.

இத்தாலி
இத்தாலி

ட்ரெண்டிங் செய்திகள்

இத்தாலி நாட்டில் சம்பூகா என்று சிற்றூர் ஒன்று உள்ளது. இது மிகவும் அழகான ஊராகும். தற்போது இந்த ஊரில் பல ஆண்டுகளாக வசித்து வந்த பூர்வீக மக்கள், வீட்டை காலி செய்து விட்டு இத்தாலி நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் குடிபெயர்ந்து விட்டனர்.

அதன் காரணமாக தற்போது அந்த ஊரில் மக்கள் தொகையானது பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ஆளில்லாமல் பலர் நகரப் பகுதிக்குக் குடி பெயர்ந்ததால் கவனிப்பாரற்று இந்த ஊரில் இருக்கும் பல வீடுகள் இடியும் நிலைக்கு வந்து விட்டன.

நகரப் பகுதிக்குக் குடியேறிய மக்கள் தற்போது இந்த வீடுகள் எந்த சூழ்நிலையில் இருக்கின்றது என்பதைக் கூட கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். இந்த ஊரில் பாதி பகுதி பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.

இந்த ஊரைக் காப்பாற்றுவதற்காக தற்போது வித்தியாவை அரசு அதிரடியான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சம்பூகா ஊரில் ஒரு வீட்டின் விலையானது வெறும் ஒரு யூரோ மட்டும்தான். அதாவது இந்திய மதிப்பில் அந்த வீட்டின் விலை 90 ரூபாய் ஆகும்.

இந்த அறிவிப்பானது கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தற்போது வரை அந்த அறிவிப்பு உயிர்ப்புடன் இருந்து வருகிறது. பெரிய நகரம் என்பதால் பாதி வீடுகள் விரைவாக விற்பனையானது. இன்னும் தற்போது சில வீடுகள் விற்பனையாகாமல் இருக்கின்ற காரணத்தினால் இரண்டு யூரோவிற்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த நகரில் வீடுகள் 6 யூரோவிற்கு விற்பனை செய்யப்படுகின்றன. வீட்டின் விலை ஆறு யூரோ என்றாலும், அதனை வாங்கிய பிறகு குறைந்தபட்சம் வீட்டை 15 ஆயிரம் முதல் 30,000 யூரோ வரை செலவு செய்து புதுப்பிக்க வேண்டும்.

இதற்கு வைப்புத் தொகையாக 5 ஆயிரம் யூரோக்களை கட்ட வேண்டும். அப்படிப் பார்த்தால் எப்படியும் செலவு அதிகமாகிவிடும். இருந்த போதும் இதனை வாங்குவதற்குப் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த வீட்டை வாங்குபவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த ஊர் மனிதர்களால் நிறைந்து விடும் எனக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்