தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Modi: அமெரிக்காவில் மோடி.. பிடனுக்கு பரிசு பெட்டி.. ஜில் பிடனுக்கு வைரம்!

Modi: அமெரிக்காவில் மோடி.. பிடனுக்கு பரிசு பெட்டி.. ஜில் பிடனுக்கு வைரம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 22, 2023 10:31 AM IST

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் மனைவி மற்றும் முதல் பெண்மணியுமான ஜில் பிடனுக்கு ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட 7.5 கேரட் மதிப்பிலான பச்சை வைரம் ஒன்றை பரிசாக அளித்தார். இது இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டை நினைவு கூறும் வைரப்பரிசு என்று கூறப்படுகிது.

பரிசு வழங்கிய மோடி
பரிசு வழங்கிய மோடி (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பிரதமர் மோடிக்கு 20ம் நூற்றாண்டுக்கு முந்தைய கையால் எழுதப்பட்ட பழமையான புத்தகம் மற்றும் கேமராவை பரிசளித்தார்.

இதையடுத்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபருக்கும் அவரது மனைவிக்கும் பரிசளித்தார்.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு தலைசிறந்த கைவினைஞரால் உருவாக்கப்பட்ட சிறப்பு சந்தனப் பெட்டியை பிரதமர் மோடி பிடனிடம் வழங்கினார். அதில் கொல்கத்தாவைச் சேர்ந்த ஐந்தாம் தலைமுறை வெள்ளித் தொழிலாளிகளின் குடும்பம் கைவினைப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகப் பெருமானின் சிலை மற்றும் ஒரு தியா (எண்ணெய் விளக்கு) பெட்டியில் உள்ளது.

லண்டனைச் சேர்ந்த கிளாஸ்கோ பல்கலை கழகத்தால் அச்சடிக்கப்பட்ட ஃபேபர் அண்ட் ஃபேபர் லிமிடெட் வெளியிட்ட ‘தி டென் பிரின்சிபல் உபநிடதங்கள்’ என்ற புத்தகத்தின் முதல் பதிப்பின் நகலையும் பரிசாக வழங்கினார்.

மேலும் பஞ்சாப் நெய், ஜார்கண்ட் கைத்தறி பட்டுத்துணி, உத்தரகண்ட் அரிசி, மகாராஷ்டிரா இனிப்பு, குஜராத் உப்பு, ராஜஸ்தான் வெள்ளி நாணயம், மேற்குவங்கத்தில் வெள்ளியில் செய்யப்பட்ட தேங்காய் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் மனைவி மற்றும் முதல் பெண்மணியுமான ஜில் பிடனுக்கு ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட 7.5 கேரட் மதிப்பிலான பச்சை வைரம் ஒன்றை பரிசாக அளித்தார். இது இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டை நினைவு கூறும் வைரப்பரிசு என்று கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்