Lok Sabha Election 2024: இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது - அதிக இளம் வாக்காளர்கள் வாக்களிக்குமாறு பிரதமர் அழைப்பு
Lok Sabha Election 2024: 2024 மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. அதிக இளம் மற்றும் பெண் வாக்காளர்கள் வாக்களிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி குடிமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
Lok Sabha Election 2024: எஞ்சியுள்ள 57 மக்களவைத் தொகுதிகளில் ஏழாவது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது.
7 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகள் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசம் உட்பட 57 மக்களவைத் தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதியான சனிக்கிழமையான இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி 486 மக்களவைத் தொகுதிகளில் 6 கட்டங்களாக நடைபெற்ற உலகின் மிகப்பெரிய வாக்குப்பதிவு நிறைவடைந்ததை இந்த நிகழ்வு குறிக்கிறது.
பல்வேறு இடங்களில் இறுதிகட்ட வாக்குப் பதிவு:
பீகார், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஏழு மாநிலங்கள் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கிடையே, மீதமுள்ள 42 ஒடிசா சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.