தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ட்விட்டர் அலுவலகங்கள் மூடப்படும் என மோடி மிரட்டியதாக முன்னாள் சிஇஓ பகீர் குற்றச்சாட்டு

ட்விட்டர் அலுவலகங்கள் மூடப்படும் என மோடி மிரட்டியதாக முன்னாள் சிஇஓ பகீர் குற்றச்சாட்டு

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 13, 2023 11:18 AM IST

இந்தியாவில் டுவிட்டரை கட்டுப்படுத்துவோம் என்று சொல்லப்பட்டது. ஆம் இவையெல்லாம் நடந்தது இந்தியா எனும் ஜனநாயக நாட்டில் தான்" என்று ட்விட்டர் முன்னாள் சிஇஓ தெரிவித்துள்ளார்.

ஜாக் டோர்சி முன்னாள் சிஇஓ
ஜாக் டோர்சி முன்னாள் சிஇஓ (Reuters file)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியாவில் 3 வேளாண் சட்டங்களை மத்திய திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடுங்கோடையையும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உறுதியான போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2020-2021 ஆம் ஆண்டு காவல்துறையினரின் பல்வேறு நெருக்கடிக்கு இடையிலும் ஓராண்டுக்கு மேல் விவசாயிகளின் போராட்டம் நீடித்தது. இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில், விவசாயிகள் போராட்டம் முடிந்து ஒரு ஆண்டுகள் கழித்து இந்திய அரசின் மீது ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ இந்த குற்றச்சாட்டை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி "இந்தியாவில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை சுற்றியும், அப்போது அரசை விமர்சிக்கும் குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை சுற்றியும் எங்களுக்கு நிறைய கோரிக்கைகள் வந்தன. விவசாயிகள் போராட்டம் நடந்த போது அது தொடர்பாக பதிவான ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் இந்தியாவிலுள்ள டுவிட்டர் ஊழியர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப்படும் எனக்கூறி அதை செய்தார்களும் கூட; இத்துடன் ட்விட்டர் அலுவலகங்களே மூடப்படும் என்றெல்லாம் மிரட்டல்கள் வந்தன. இந்தியாவில் ட்விட்டரை கட்டுப்படுத்துவோம் என்று சொல்லப்பட்டது. ஆம் இவையெல்லாம் நடந்தது இந்தியா எனும் ஜனநாயக நாட்டில் தான்" என்று அவர் கூறினார். விவசாயிகள் போராட்டம் முடிந்து ஒரு ஆண்டுகள் கழித்து இந்திய அரசின் மீது ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சிஇந்த குற்றச்சாட்டை கூறி இருப்பது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

ஏற்கனவே ட்விட்டர் நிறுவனத்தி தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) செயல்பட்டு வந்த ஜாக் டோர்சி கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 29-ந்தேதி பதவி விலகினார். இதனை தொடர்ந்து, ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தவர். இந்தியா வம்சாவளியான பராக் அகர்வால் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர்.

இதற்கிடையில் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கினார். இதைத்தொடர்ந்து பராக் அகர்வால் நீக்கப்பட்டார். இதையடுத்து அமெரிக்காவை சேர்ந்த லிண்டா யாக்கரினோவை அதிகாரபூர்வமாக டுவிட்டர் சிஇஓவாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்