தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Bbc India: பிபிசி தொலைக்காட்சிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

BBC India: பிபிசி தொலைக்காட்சிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 13, 2023 12:07 PM IST

பிபிசி நிறுவனத்தில் வெளிநாட்டு நிதி பெற்றதில் முறைகேடு நடந்தது என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் பிபிஐ செய்தி நிறுவனம் மீது தற்போது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

An image of British Broadcasting Corporation (BBC) Director-General Tim Davie is seen through the door at the BBC headquarters in London, Britain, March 13, 2023. REUTERS/Henry Nicholls
An image of British Broadcasting Corporation (BBC) Director-General Tim Davie is seen through the door at the BBC headquarters in London, Britain, March 13, 2023. REUTERS/Henry Nicholls (REUTERS)

ட்ரெண்டிங் செய்திகள்

குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி நிறுவனம் இந்தியா மோடிக்கான கேள்விகள் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டது. இந்த ஆவணப்படும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து பிபிசி நிறுவனத்தில் வருமான வரித்துறை கடந்த பிப்ரவரி 14ம் தேதி அதிரடியாக நுழைந்து ஆய்வு நடத்தியிருந்தது.பிப்ரவரி 16 வரை நடந்த இந்த ஆய்வில் பிபிசி நிறுவனத்தில் வெளிநாட்டு நிதி பெற்றதில் முறைகேடு நடந்தது என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் பிபிஐ செய்தி நிறுவனம் மீது தற்போது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

முன்னதாக "வருமான வரி சட்டம் 1961 பிரிவு 133ஏ விதிகளை மீறியிருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, டெல்லி, மும்பையில் உள்ள சர்வதேச செய்தி நிறுவன (பிபிசி) அலுவலகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த நிறுவனம் ஆங்கிலம், இந்தி மற்றும் பல்வேறு இந்திய பிராந்திய மொழிகளில் செய்திகளை வெளியிட்டு வருகிறது. விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டி வருகிறது. ஆங்கிலம் தவிர்த்து இந்திய பிராந்திய மொழிகளின் செய்தி சேவையில் பிபிசி ஈட்டிய விளம்பர வருவாயில் முரண்பாடுகள் உள்ளன. உண்மையான வருவாய்க்கு ஏற்ப அந்த நிறுவனம் வரி செலுத்தவில்லை. பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

வெளிநாடுகளை சேர்ந்த தற்காலிக ஊழியர்களுக்கு பிபிசி நிறுவனம் ஊதியம் வழங்கியிருக்கிறது. சட்டவிதிகளின்படி இந்த ஊதியத்துக்கு வரி செலுத்த வேண்டும். ஆனால்,பிபிசி முறையாக வரி செலுத்தவில்லை. வரிஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பிபிசி ஊழியர்கள் அளித்த வாக்குமூலம் முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட உள்ளன.

வருமான வரித் துறை ஆய்வின்போது பிபிசி நிறுவனம் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனினும், அதன் செய்தி சேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆய்வு நடத்தப்பட்டது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்