2024Election: ’அடேங்கப்பா 11 பேரு! பயப்படும் மோடி!’ மல்லிகார்ஜூன கார்கே அதிரடி பேச்சு!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  2024election: ’அடேங்கப்பா 11 பேரு! பயப்படும் மோடி!’ மல்லிகார்ஜூன கார்கே அதிரடி பேச்சு!

2024Election: ’அடேங்கப்பா 11 பேரு! பயப்படும் மோடி!’ மல்லிகார்ஜூன கார்கே அதிரடி பேச்சு!

Kathiravan V HT Tamil
Jul 31, 2023 12:37 PM IST

“பிரதமர் மோடி இப்போது எதிர்க்கட்சிகளுக்கு பயப்படுகிறார்”

பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (PTI)

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, ஐயூஎம்எல், கொமதேக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம், ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சி, தேசியவாத காங்கிரஸ், ஜார்க்கண் முக்தி மோர்ச்சா, காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட 26 கட்சிகள் பங்கேற்றுள்ளன.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (I.N.D.I.A - INDIAN NATIONAL DEMOCRATIC INCLUSIVE ALLIANCE) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்கு பின்னர் ’இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே,  பாட்னா கூட்டத்தில் 16 கட்சிகள் பங்கேற்ற நிலையில் பெங்களூரு கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றுள்ளோம். மோடி எதிர்க்கட்சிகள் கூட்டணியை பார்த்து பயப்பட தொடங்கிவிட்டார். 

அரசியல் ரீதியாக ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபாடுகள் இருந்தாலும் தேசத்திற்காக இணைந்துள்ளோம்.  அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்பு துறை உள்ளிட்ட அமைப்புகள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஏவப்படுகிறது.  

26 கட்சிகள் பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்ததை பார்த்து சிறிய, சிறிய கட்சிகளை கூட்டணியில் பாஜக இணைத்து வருகிறது. 

அடுத்த எதிர்க்கட்சி கூட்டம் மும்பையில் நடைபெறும், தேதி விரைவில் அறிவிக்கப்படும். 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும். குழு உறுப்பினர்களின் பெயர்கள் மும்பையில் அறிவிக்கப்படும்.

தேசிய ஜனநாயக கூட்டணி 30 கட்சிகளுடன் கூட்டம் நடத்துகிறது. இந்தியாவில் இத்தனை கட்சிகள் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. 

முன்பு கூட்டங்கள் எதுவும் நடத்தவில்லை ஆனால் இப்போது ஒவ்வொன்றாக (NDA கட்சிகளுடன்) சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் . ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்றவே நாங்கள் இங்கு கூடியுள்ளோம் என கூறினார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.