தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Brij Bhushan Singh: பிரிஜ் பூஷன் சிங்கிற்கு இடைக்கால ஜாமின்

Brij Bhushan Singh: பிரிஜ் பூஷன் சிங்கிற்கு இடைக்கால ஜாமின்

Manigandan K T HT Tamil
Jul 18, 2023 03:12 PM IST

Delhi Court: சில மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் (நடுவில்)
மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் (நடுவில்) (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

வரும் 20ம் தேதி அவர் மீண்டும் ஆஜராக ஆணையிடப்பட்டுள்ளது.

இவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்ட வந்தனர்.

புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழா அன்று அவர்கள் நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி முன்னேறிச் செல்ல முயன்றனர்.

அப்போது போலீஸார் அவர்களை அத்துமீறி செல்ல முயன்றதாக தடுப்புக் காவலில் வைத்து பின்னர் விடுவித்தனர். நீதி கிடைக்கவில்லை என கூறி ஒலிம்பிக்கில் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீச முடிவு செய்து மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் சென்றனர்.

ஆனால், விவசாய சங்கத் தலைவர்களின் தலையீட்டால் பதக்கங்களை கங்கையில் வீசாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக மல்யுத்த வீரர்கள் கைவிட்டுள்ளனர்.

முன்னதாக, எனக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்க கூட தயார் என தெரிவித்திருந்தார் பிரிஜ் பூஷன்.

6 முறை எம்.பி.யான பிரிஜ் பூஷன் சரண் சிங், 50 தனியார் கல்வி மையங்களை நடத்தி வருகிறார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக உள்ளார்.

முன்னதாக, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடைபெற்ற ஜந்தர் மந்தர் பகுதிக்கு நேரில் சென்று பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்து இருந்தார்.  மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகளின் நிர்வாகிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக்கும் ஆதரவு கரம் நீட்டியிருந்தார்.

மூத்த மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் ஆகியோர் தலைமையில் இந்த போராட்டமானது டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கி நடந்தது நினைவுகூரத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்