தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Breast Milk Donation: 1600 லிட்டர் தாய்ப்பாலை தானம் தந்து கின்னஸ் சாதனை படைத்த தாய்பால் தெய்வம்

Breast Milk Donation: 1600 லிட்டர் தாய்ப்பாலை தானம் தந்து கின்னஸ் சாதனை படைத்த தாய்பால் தெய்வம்

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 18, 2023 03:16 PM IST

Guinness Record: கடந்த 2015ல் பிப்ரவரி 20ந் தேதி முதல் 2018ல் ஜூன் 20 ந் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1599.68 லிட்டர் தாய்ப்பாலை வங்கிக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

தாய்ப்பால் தானம்
தாய்ப்பால் தானம்

ட்ரெண்டிங் செய்திகள்

அமெரிக்காவின் ஓரிகான் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் ஆண்டர்சன் சியாரா. இவருக்கு ஹைப்பர் லாக்டேஷன் சிண்ட்ரோம் என்ற நோய் தாக்கம் உள்ளது. இதனால் இவரது உடல் நாளொன்றுக்கு சுமார் 6.65 லிட்டர் தாய்ப்பாலை உற்பத்தி செய்கிறது. இது சராசரியான தாய்ப்பால் சுர்ப்பை காட்டிலும் கிட்டத்தட்ட 8 முதல் 10 மடங்கு அதிகம் உள்ளது.

2014ல் ஹைப்பர் லாக்டேஷன் சிண்ட்ரோம் நோய் இருப்பது கண்டறியப்பட்டபோது அவரது மார்பில் இருந்து எதிர்பார்க்க முடியாத அளவு பால் சுரப்பு ஏற்பட்டது. இதனால் தாய்ப்பால் வீணாகுவதை தவிர்க்க எலிசபெத், பிற தாய்மார்களுக்கு உதவ முடிவெடுத்தார். அதன்பிறகு அவர் சுமார் 250 குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானமாக கொடுத்தார்.

இந்த நிலையில் கடந்த 2015ல் பிப்ரவரி 20ந் தேதி முதல் 2018ல் ஜூன் 20 ந் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1599.68 லிட்டர் தாய்ப்பாலை வங்கிக்கு நன்கொடையாக அளித்துள்ளார். இந்த நிலையில் தான் ஆண்டர்சன் சியாரா கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் உலகின் முதல் தாய்பால் வங்கி வட அமெரிக்காவின் போஸ்டன் மாநகரில் 1910ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை 1989ம் ஆண்டு முதல் தாய்பால் வங்கி மும்பை தாராவியில் அர்மேதா ஃபெர்னாண்டஸ் என்பவரால் தொடங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2014ம் ஆண்டு தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, சேலம், தேனி, என 5 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தாய்பால் வங்கி தொடங்கப்பட்டது.

தாய்பாலை திரவ தங்கம் என்று அழைப்பர். தாய்ப்பால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாக உருவாக்கும் உணவாகும்.

அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கு சமயத்தில் பால் அதிகமாக சுரக்காது. அதே போல பிரசவத்தின் போது தாய் இறந்து விட்டால் பிறக்கும் குழந்தைக்கு தாய் பால் கிடைக்காது. எனவே இந்த மாதிரியான நிலைமையில் குழந்தைக்கு உரிய ஊட்டச்சத்து மிக்க தாய்ப்பாலை வழங்கும் நோக்கத்தில் Human milk bank என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த தாய்ப்பால் வங்கியில் விருப்பப்பட்ட பெண்கள் தங்களால் இயன்றவரை தங்கள் தாய்ப்பாலை தானமாக வழங்குவர். அந்த தாய்ப்பால் சேகரிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பான முறையில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

\சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்