தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Brahmins: ’ரஷ்யாவில் இருந்து வந்த பிராமணர்களை விரட்ட வேண்டும்’ Dna -வை சுட்டிக்காட்டிய Rjd தலைவர் பேச்சால் சர்ச்சை

Brahmins: ’ரஷ்யாவில் இருந்து வந்த பிராமணர்களை விரட்ட வேண்டும்’ DNA -வை சுட்டிக்காட்டிய RJD தலைவர் பேச்சால் சர்ச்சை

Kathiravan V HT Tamil
May 02, 2023 10:49 AM IST

”பிராமணர்கள் நம்மைப் பிரித்து ஆளப் பார்க்கிறார்கள். அவர்களை இங்கிருந்து விரட்டியடிப்பது முக்கியம்”

ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தேசிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான யதுவன்ஷ் குமார்
ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தேசிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான யதுவன்ஷ் குமார்

ட்ரெண்டிங் செய்திகள்

பீகாரின் சுபாலில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய யதுவன்ஷ் குமார் யாதவ், "யாதவ் சமூகத்தினர் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். டிஎன்ஏ சோதனையில் பிராமணர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் ரஷ்யா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இப்போது இங்கே குடியேறிவிட்டார்கள். பிராமணர்கள் நம்மைப் பிரித்து ஆளப் பார்க்கிறார்கள். அவர்களை இங்கிருந்து விரட்டியடிப்பது முக்கியம்." என பேசி இருந்தார்.

யதுவன்ஷ் குமார் யாதவ் தெரிவித்த கருத்துகளுக்கு ஆர்ஜேடியின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இருந்தே எதிர்வினைகள் வரத் தொடங்கி உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் குமார் ஜா, "ஆர்ஜேடி தலைவர் கூறிய கருத்து கொடூரமானது. சுவாமி பரசுராம் ரஷ்யாவில் இருந்து வந்தாரா அல்லது வேறு நாட்டிலிருந்து வந்தாரா? இதுபோன்ற கொடூரமான கருத்துக்களை ஆர்ஜேடி தலைவர்கள் ஊடகங்களில் பேசி மகாகத்பந்தனின் இமேஜையும் சேதப்படுத்துகிறார்கள் என்று அபிஷேக் குமார் ஜா கூறி உள்ளார்.

இந்த விவகாரம் பீகார் அரசியலில் விவாதத்தை கிளப்பி உள்ள நிலையில் ஆளும் கூட்டணியான மகாகத்பந்தனை பாஜகவும் விமர்சித்துள்ளது. ”சர்ச்சைக்குரிய கருத்துகளை யார் முதலில் பேசுவது என்பதில் மகாகட்பந்தனில் உள்ள கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது” என பாஜக கிண்டல் அடித்துள்ளது.

"மேலும் ஆர்ஜேடி கட்சியின் நிர்வாகி மனோஜ் குமார் ஜா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிர்வாகி சஞ்சய் ஜா ஆகிய பிராமணர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்களா அல்லது வேறு நாட்டில் இருந்து வந்தவர்களா என்பதை விளக்க வேண்டும் என்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நீரஜ் குமார் பப்லு கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரியில், பீகார் கல்வி அமைச்சர் சந்திர சேகர், ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட இந்து மத புத்தகமான ராம்சரித்மனாஸ் 'சமூகத்தில் வெறுப்பை பரப்புகிறது' என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துகளை எதிர்க்கட்சிகள் மற்றும் பீகாரில் ராஷ்டிரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) கட்சியின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் (ஜேடி(யு)) விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்