Covishield: ’கோவிஷீல்டு நிறுவனத்திடம் 200 கோடி நன்கொடையை பாஜக பெற்றது!’ டிம்பிள் யாதவ் சரமாரி கேள்வி!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Covishield: ’கோவிஷீல்டு நிறுவனத்திடம் 200 கோடி நன்கொடையை பாஜக பெற்றது!’ டிம்பிள் யாதவ் சரமாரி கேள்வி!

Covishield: ’கோவிஷீல்டு நிறுவனத்திடம் 200 கோடி நன்கொடையை பாஜக பெற்றது!’ டிம்பிள் யாதவ் சரமாரி கேள்வி!

Kathiravan V HT Tamil
Apr 30, 2024 09:08 PM IST

”கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் இருந்து பாஜக கமிஷன் பெற்றது என சமாஜ்வாதி கட்சி குற்றம்சாட்டி உள்ளது”

கோவிஷீல்ட் நிறுவனத்தில் இருந்து கோடிக்கணக்கில் பாஜக நன்கொடைகளை பெற்று உள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ் தெரிவித்து உள்ளார்.
கோவிஷீல்ட் நிறுவனத்தில் இருந்து கோடிக்கணக்கில் பாஜக நன்கொடைகளை பெற்று உள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ் தெரிவித்து உள்ளார். (HT_PRINT)

கோவிஷீல்ட் தடுப்பூசியின் "பக்க விளைவுகள்" குறித்த சர்ச்சைக்கு மத்தியில், மக்களுக்கு "கட்டாயமாக" செலுத்தப்பட்ட கோவிட் தடுப்பூசி தயாரிப்பாளரிடமிருந்து பாஜக "கமிஷன்" எடுத்ததாக சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

மக்களவைத் தேர்தல் குறித்து சிவபால் யாதவ் கூறுகையில், உத்தரப் பிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் பாஜக தோல்வியைச் சந்திக்கப் போகிறது. நாட்டில் பாஜகவுக்கு 200 இடங்கள் கூட கிடைக்காது. இந்தியா கூட்டணிதான் அடுத்த ஆட்சியை அமைக்கப் போகிறது" என்று அவர் கூறினார்.

இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் ஐரோப்பாவில் வாக்ஸ்செவ்ரியா என்றும் இந்தியாவில் கோவிஷீல்ட் என்றும் அழைக்கப்படும் கோவிட்-19 தடுப்பூசி இரத்த உறைவு தொடர்பான பக்கவிளைவை ஏற்படுத்தும், ஆனால் அதற்கான காரணத் தொடர்பு தெரியவில்லை. என தெரிவித்து உள்ளது.  

இந்தியாவில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தால் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தயாரிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் பாஜகவைத் தாக்கிய சமாஜ்வாதி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஷிவ்பால் யாதவ், "பாஜக தடுப்பூசிகளிலும் கமிஷன் வாங்கி இருப்பது தற்போது அம்பலமாகி உள்ளது. தரம் குறைந்த தடுப்பூசிகளும் மருந்துகளும் மக்களுக்கு வழங்கப்பட்டன" என குற்றம்சாட்டி உள்ளார். 

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் கூறுகையில், "ரூ. 200 முதல் 300 கோடி வரை நன்கொடையாக பாஜகவால் பெறப்பட்டதாக கூறினார். தடுப்பூசியை சந்தைப்படுத்த அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மக்கள் வலுக்கட்டாயமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டனர். 

உலகில் எங்கும் வலுக்கட்டாயமாக தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை. தடுப்பூசி உற்பத்தியில் ஊழல் முன்னுக்கு வந்துவிட்டது, இதன் காரணமாக மக்கள் இப்போது இறந்து கொண்டிருக்கிறார்கள்” என்று மெயின்புரி மக்களவைத் தொகுதியின் வேட்பாளரும், அகிலேஷ் யாதவ்வின் மனைவியுமான டிம்பிள் யாதவ் கூறி உள்ளார் 

தடுப்பூசி போடுவது கட்டாயப்படுத்தப்பட்டால் தடுப்பூசி போட மாட்டோம் என்று அகிலேஷ் ஜி கூறியிருந்தார். தற்போது, நாட்டில் மாரடைப்பு எண்ணிக்கை அதிகரித்து, இந்த அவசரத்தால் மக்கள் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என டிம்பிள் யாதவ் கூறி உள்ளார்.

கோவிஷீல்டு பிரச்னை வெடித்தது எப்படி?

இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா (AZ) அதன் கோவிட் தடுப்பூசி "மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில்" இரத்த உறைவு தொடர்பான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் இதற்கான காரணம் தெரியவில்லை என்று இங்கிலாந்து ஊடகங்களில் மேற்கோள் காட்டப்பட்ட நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

கோவிட்-19 நோய் தொற்றுக்கு எதிராக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் உருவாக்கப்பட்ட தடுப்பூசி "மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில்" த்ரோம்போசைட்டோபீனியா நோய்க்குறி (டி.டி.எஸ்) உடன் த்ரோம்போசிஸை ஏற்படுத்தக்கூடும் என்று பிப்ரவரியில் லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு சட்ட ஆவணத்தில் 'தி டெய்லி டெலிகிராப்' தெரிவித்துள்ளது. 

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) தயாரித்த ஏஇசட் வாக்ஸெவ்ரியா தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்ட் என்று அழைக்கப்படுகிறது.

"ஏஇசட் தடுப்பூசி, மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், டி.டி.எஸ்ஸை ஏற்படுத்தும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. காரண காரிய வழிமுறை அறியப்படவில்லை. மேலும், AZ தடுப்பூசி இல்லாத நிலையிலும் TTS ஏற்படலாம் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.