Vaccination Side Effects : குழந்தைகளின் பாதுகாப்பு்ககு செலுத்தப்படும் தடுப்பூசிகளில் இத்தனை பிரச்னைகளா?–அதிர்ச்சி ஆய்வு
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vaccination Side Effects : குழந்தைகளின் பாதுகாப்பு்ககு செலுத்தப்படும் தடுப்பூசிகளில் இத்தனை பிரச்னைகளா?–அதிர்ச்சி ஆய்வு

Vaccination Side Effects : குழந்தைகளின் பாதுகாப்பு்ககு செலுத்தப்படும் தடுப்பூசிகளில் இத்தனை பிரச்னைகளா?–அதிர்ச்சி ஆய்வு

Priyadarshini R HT Tamil
Apr 19, 2024 03:48 PM IST

Vaccination Side Effects : குழந்தைகள் மத்தியில் தடுப்பூசிகளின் பின்விளைவுகள் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக உயர்ந்து வந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Vaccination Side Effects : குழந்தைகளின் பாதுகாப்பு்ககு செலுத்தப்படும் தடுப்பூசிகளில் இத்தனை பிரச்னைகளா?–அதிர்ச்சி ஆய்வு
Vaccination Side Effects : குழந்தைகளின் பாதுகாப்பு்ககு செலுத்தப்படும் தடுப்பூசிகளில் இத்தனை பிரச்னைகளா?–அதிர்ச்சி ஆய்வு

தமிழக மாநில, மாவட்ட தடுப்பூசி பின்விளைவுகளை ஆராயும் குழுக்கள் திறம்பட செயல்பட்டு, பின்விளைவுகளை அதிகம் கண்டறிந்ததாலே இது சாத்தியமாயிற்று என தமிழக பொதுசுகாதாரத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், தடுப்பூசி செலுத்திய பின் பிரச்னைகள் ஏதும் இல்லாமல், உயிருடன் இருக்கும் 1,00,000 குழந்தைகள் மத்தியில் நிகழும் மிக மோசமான தடுப்பூசி பின்விளைவுகள் (Serious and Severe Reactions) விகிதம் 2015-16ல் 0.71 சதவீதம் என இருந்தது, 2023-24 (பிப்ரவரி வரை) ல் 4.71 சதவீதமாக அதிகரித்தது, மாநில அரசின் ஆய்வில் தெரியவந்து, அது "மாநில மருத்துவ ஆய்விதழில்" வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசியின் பின்விளைவுகளை ஆராயும் மாநில மற்றும் மாவட்டக் குழுக்கள் 2007ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

குழுவில், பொதுமருத்துவர்கள், குழந்தைகள் மருத்துவர்கள், குழந்தை பிறப்பு மருத்துவர்கள், நரம்பியல் மற்றும் இதயத் துறை நிபுணர்கள், இந்திய குழந்தைகள் மருத்துவர் குழு (IAP) மற்றும் இந்திய மருத்துவர்கள் குழு (IMA), இவர்களுடன் இணைந்து தடுப்பூசியின் பின்விளைவுகளை ஆய்வுசெய்பவர் என இருப்பார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்களையும் குழுவில் சேர்க்கவேண்டும்.

மார்ச் 2014 முதல் மார்ச் 2024 இடைப்பட்ட காலத்தில், குழு 60 முறை சந்தித்து, தடுப்பூசியின் காரணமாக1,887 மிக மோசமான பின்விளைவுகள் நடந்துள்ளதாக பதிவுசெய்துள்ளது.

அவற்றில் இதுவரை 1,684 பின்விளைவுகள் குறித்து, கலந்தாலோசனை செய்யப்பட்டு, பின்வரும் முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

47.8 சதவீதம் பின்விளைவுகள் தடுப்பூசியின் பொருட்கள் காரணமாக நிகழ்ந்துள்ளது. (Vaccine Product-related Reactions)

39.3 சதவீதம் பின்விளைவுகள் தற்செயலான நிகழ்வுகள் (Coincidental) என்றும்,

தடுப்பூசி குறைப்பாடு காரணமாக (Vaccine defect-related Reactions) எந்த பின்விளைவும் நிகழவில்லை என்றும் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இந்த ஆய்வுக்கட்டுரையை வித்யா விஸ்வநாதன் என்பவர் செய்துள்ளார். தடுப்பூசியின் காரணமாக எழுந்த சிறு பின்விளைவுகளும் தமிழகத்தில் அதிகரித்துள்ளன.

2011-12 - 95.56 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டபோது 2,671 பின்விளைவுகள் பதிவுசெய்யப்பட்டன.

2023-24ல் (பிப்ரவரி வரை), 146.42 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டபோது, 46,369 சிறு பின்விளைவுகள் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குநர், செல்வவிநாயகம், தடுப்பூசிகளின் பின்விளைவுகளை கண்டறிவதில் தமிழகத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

துறைசார்ந்த மருத்துவ நிபுணர்கள் ஜேக்கப் ஜான் போன்றோர் மாறுபட்ட வேறுவிதமான கருத்துகளை முன்வைக்கின்றனர்.

தடுப்பூசி பின்விளைவுகள் குறித்தான புரிதல் சற்று அதிகமானாலும், தடுப்பூசி பின்விளைவு தரவுகளின் தரம், பின்விளைவுகளை உறுதிபடுத்தும் ஆய்வுகளின் முழுமை மற்றும் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாகியுள்ளது. அவை திருப்திகரமாக இல்லை.

தடுப்பூசி பின்விளைவுகளின் அனைத்து உண்மை புள்ளிவிவரங்களும் வெளிச்சத்திற்கு வருகிறதா? என்ற ஐயப்பாடு உள்ளது.

எல்லா தடுப்பூசி பின்விளைவுகளையும் விழிப்புடன் இருந்து பதிவுசெய்ய போதுமான ஆட்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதி தமிழகத்தில் அல்லது இந்தியாவில் உள்ளதா? போன்ற முக்கிய கேள்விகளை அவர் கேட்கிறார்.

தமிழக சுகாதாரத்துறை, "தடுப்பூசி பின்விளைவுகளை கண்காணித்து, கண்டறிதலை மேம்படுத்துவது, வெற்று வார்த்தைகளாக இல்லாமல், நடைமுறையில் செயல்பாட்டில் தீவிரம் காட்டினால் சிறப்பாக இருக்கும்".

தடுப்பூசியின் பின்விளைவுகளை அறிய உதவும், "Brighton's Colloboration Criteria" (இறப்பிற்கு வேறு காரணங்களை உறுதியாக சொல்லமுடியாமல் போனால், அந்த இறப்பை தடுப்பூசி இறப்பாக கருத வேண்டும் எனும் முந்தைய WHO (உலக சுகாதார நிறுவனம்) விதிகளை மாற்றினால் அல்லது பின்பற்றாமல் இருத்ததால் உண்மை நிலையை எப்படி கண்டறிய முடியும்? (இதை குழந்தைகள் மருத்துவர். ஜேக்கப் புலியேல் கடுமையாக விமர்சித்துள்ளார்.)

மக்கள் தான் விழிப்புடன் இருந்து அவர்களின் உரிமைகளை (தடுப்பூசி போட வேண்டுமா? இல்லையா என்பதை தீர்மானிப்பது) காத்துக்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு, குழந்தைகள் மத்தியில் தடுப்பூசியின் பின்விளைவுகள் அதிகமாகியுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளது பாராட்டத்தக்கது.

தடுப்பூசி விசயத்தில், அறிவியல் கருத்துகள் முடிவுகளை தீர்மானிக்க வேண்டும்.

நன்றி – மருத்துவர். புகழேந்தி.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.