தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Apple Introduces Fastest Macbook Pro And Mac Mini

Apple New Mac Mini: ஐபோன் 14ஐ விட விலை குறைவான Mac Mini டெஸ்க்டாப் அறிமுகம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 19, 2023 01:52 PM IST

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே சர்ப்ரைசாக ஆப்பிள் நிறுவனம் புதிய Mac Book லேப்டாப், Mac Mini டெஸ்க்டாப் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த இரண்டு கேட்ஜெட்களும் இந்த மாதத்திலேயே விற்பனைக்கு களமிறக்கப்படுகிறது.

உயர் செயல்திறன் கொண்ட MacBook Pro, Mac Miniஐ அறிமுகம் செய்த ஆப்பிள்
உயர் செயல்திறன் கொண்ட MacBook Pro, Mac Miniஐ அறிமுகம் செய்த ஆப்பிள்

ட்ரெண்டிங் செய்திகள்

நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவில் மிக சிறிய வடிவமைப்புடன், உயர் செயல்திறன் கொண்டதாகவும், இந்த M2 Pro சி்ப் கொண்ட Mac Mini வழங்குகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த M2 மற்றும் M2 Pro உடன் கூடிய Mac mini வேகமான செயல்திறன், ஒருங்கிணைக்கப்பட்ட நினைவகம், மேம்பட்ட இணைப்பு வசதிகளை கொண்டுள்ளது. , இதில் M2 மாடலில் இரண்டு டிஸ்ப்ளேக்கள் மற்றும் M2 Pro மாடலில் மூன்று டிஸ்ப்ளேக்கள் வரை பெறக்கூடிய ஆதரவு உள்ளது.

27 இன்ச் iMac சாதனத்தை Intel Core i7 மற்றும் Radeon Pro 5500 XT ஒப்பிட்டு பார்க்கையில், Adobe Photoshopஇல் 50 சதவீதம் வரை வேகமான செயல்திறன் மற்றும் பில்டர் ஆப்ஷன் செயல்பாட்டை காணலாம்.

Final Cut Pro விடியோ எடிட்டிங் செயலியில் 4.4x அளவில் வேகமான object tracking செய்யலாம்.

Adobe Lightroom Classicஇல் 5.5x வேகத்தில் panoramic merge செய்யலாம்.

அதேபோல் 14 மற்றும் 16 இன்ச் MacBook Pro, கடந்த 2021இல் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல்களை போல் வடிவமைக்கப்ரபட்டிருந்தாலும், M2 Pro மற்றும் M2 Max சிப்கள் இணைக்கப்பட்டுள்ளன. மிகவும் வேகமான Wi-FI இணைப்பு பெறுவதற்கு ஏற்ப Wi-Fi 6E அம்சத்தை கொண்டுள்ளது. இவற்றுடன் வெளிப்புற ட்ஸ்ப்ளே பெறுவதற்கு ஏற்ப HDMI Port இணைக்கப்பட்டுள்ளது.

Mac Book, Mac Mini என இரண்டு சாதனங்களுக்கும் மேம்பட்ட செயல்திறனை கொண்ட ப்ளூடூத் 5.3 வெர்ஷன் உள்ளது.

இந்த புதிய MacBook Pro 14 இன்ச் அமெரிக்க டாலர் $1999 எனவும், 16 இன்ச் #2499 எனவும் உள்ளது.

வரும் 2025இல் ஆப்பிள் நிறுவனம் டச் ஸ்கிரீனுடன் கூடிய MacBook Pro லேப்டாப்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

IPL_Entry_Point