தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Tim Cook Vs Ashvini Vaishnav : வாவ்… ஆப்பிள் சிஇஓ டிம் குக்கை வாய்பிளக்க வைத்த இந்திய அதிசயம் என்ன?

Tim Cook vs Ashvini Vaishnav : வாவ்… ஆப்பிள் சிஇஓ டிம் குக்கை வாய்பிளக்க வைத்த இந்திய அதிசயம் என்ன?

Priyadarshini R HT Tamil
Apr 21, 2023 08:37 AM IST

Central Railway Minister met Apple CEO : ஆப்பிள் சிஇஓ டிம்குக் தனது ஆப்பிள் ஸ்டோர்களை இந்தியாவில் திறப்பதற்காக இந்தியாவில் பயணத்தில் உள்ளார். அப்போது அவர் அரசியல், சினிமா பிரபலங்களை சந்தித்தார். அதன் ஒருபகுதியாக அவர் ஜம்மு-காஷ்மீரின் செனாப் பாலத்தை பார்த்து வாவ் என்று வாழ்த்தியிருக்கிறார்.

ஆப்பிள் சிஇஓ டிம் குக்குடன் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
ஆப்பிள் சிஇஓ டிம் குக்குடன் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

ட்ரெண்டிங் செய்திகள்

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒரு வீடியோ கிளிப்பிங்கை நேற்று வெளியிட்டார். அந்த வீடியோ மேட் இன் இண்டியா ஐஃபோனில் எடுக்கப்பட்டிருந்தது. அதில் ஆப்பிளின் இரண்டாவது ஸ்டோரை திறந்துவைத்த அதன் சிஇஓ டிம்குக் பேசியிருந்தது தெளிவாகக் கேட்டது. ஓ…வாவ்…இது ஸ்பெஷல் வாவ்… என்று கூறியிருந்தார். அவர் ஜம்மு-காஷ்மீரின் செனாப் பாலத்தை பார்த்த பின்னர், அந்த பாலம் குறித்து வியந்து பாராட்டி அதை கூறியிருந்தார்.

அந்த 26 நிமிட வீடியோ கிளிப்பில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும், ஆப்பிள் சிஇஓ டிம் குக்குக்கும் இடையே நடந்த உரையாடலை காட்டுகிறது. அதில் அமைச்சர் ஜம்மு-காஷ்மீரின் செனாப் பாலத்தை திரையில் காட்டி அதுகுறித்து விளக்குகிறார். அதில், “இந்த பாலம் காஷ்மீரின் வடக்கு பகுதியை இணைக்கிறது. இபிள் டவரைவிட 30 மீட்டர் உயரத்தில் இந்தப்பாலம் உள்ளது“ என்று அஸ்வின் கூறுகிறார். அதற்குத்தான் டிம் குக் வாவ் என்று வாழ்த்தினார்.

மீண்டும் அவர் கூறுகிறார் “இது முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. அதில் அண்மையில் அதன் மீது ரயில்வே பாதைகள் அமைக்க ஆணையிடப்பட்டது. டிசம்பர் மாதத்தில் நாங்கள் அதில் வந்தே பாரத் ரயிலை இயக்குகிறோம் என்றார். அதற்கு குக், ‘ஓ வாவ! இது ஸ்பெஷல் வாவ்! வாவ்! என்றார்.

அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதை பல லட்சம் பேர் பார்துள்ளனர். பல்லாயிரகணக்கானோர் லைக் செய்துள்ளனர். பெரும்பாலானோர், ஆப்பிள் சிஇஓ பதிலளித்துள்ள விதம் நிறைய பேரை ஈர்த்துள்ளது. மேலும் நாட்டின் உட்கட்டமைப்பு மற்றம் தொழில்நுட்ப வளர்ச்சிகள் அனைத்தும் நம்மை பெருமையடையச்செய்துள்ளது.

மேட் இன் இண்டியா ஐபோனில் படம் பிடிக்கப்பட்டது என்பதை குறிப்பிட்டு, இந்தியா வளர்ச்சிப்பாதையில் கீழிருந்து மேல் நோக்கி செல்வதை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

கடின உழைப்பு, புது முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை காட்டுகிறது என்று ஒருவர் தெரிவித்திருந்தார்.

அவரது முதல் இந்திய பயணத்தில் இருந்து தற்போது வரை, இந்தியா அதிகம் மாறிவிட்டது. தற்போது எதிர்காலத்தில் ஐபோன்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். அவரது முகத்தில் உள்ள நம்பிக்கையை பாருங்கள். நமது அஸ்வினி வைஷ்வ் அனைத்தையும் திரையில் காட்டுகிறார் என்று ஒரு டிவிட்டர் பயனாளர் குறிப்பிட்டுள்ளார்.

ரயில்வே அமைச்சர் டிம் குக்கை புதனன்று சந்தித்து, வந்தே பாரத் ரயிலின் சிறிய வடிவத்தை நினைவு பரிசாக வழங்கினார். ஆப்பிள் நிறுவனத்தில் தயாரிப்பு, எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, பொருளாதாரம், திறன், நிலைத்தன்மை, வேலைவாய்ப்பு உருவாக்கம் குறிப்பாக பெண்களுக்கு என அனைத்து குறித்தும் இருவரும் விவாதித்தனர். நீண்ட நேரம் உரையாடினோம். பலமான உறவு என்று டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்