Amruta: மாடல் - வங்கியாளர் - அரசியல்வாதியின் மனைவி என பன்முகத்திறமையில் ஜொலிக்கும் அம்ருதா ஃபட்னாவிஸ் பிறந்தநாள் இன்று
Amruta Fadnavis:மாடலும் வங்கியாளருமான அம்ருதா ஃபட்னாவிஸின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இன்று அவருக்கு வயது 45.

Amruta Fadnavis அம்ருதா ஃபட்னாவிஸ் ஒரு வங்கியாளர், நடிகை, பாடகர் மற்றும் சமூக சேவையாளர். இவர் மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி ஆவார். மேலும் ஆக்ஸிஸ் வங்கியின் துணைத் தலைவராக உள்ளார்.
யார் இந்த அம்ருதா ஃபட்னாவிஸ்?: அம்ருதா ஃபட்னாவிஸ் 1979ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி, மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூரில் வசிக்கும் கண் மருத்துவரான ஷரத் ரானடேவுக்கும், மருத்துவருமான சாருலதா ரானடேவுக்கும் ஏப்ரல் 9ஆம் தேதி மகளாகப் பிறந்தார். இளம்வயதிலேயே விளையாட்டில் ஆர்வம் கொண்ட அம்ருதா, பள்ளிப்படிப்பில் மாநில அளவில் விளையாடும் டென்னிஸ் வீராங்கனையாவார். அதன்பின், நாக்பூரில் ஜி.எஸ். வணிகவியல் கல்லூரியில் பட்டம் பெற்றார். அதன்பின், நிதித்துறையில் எம்.பி.ஏ முதுகலைப் படிப்பினையும், புனேவில் உள்ள சிம்பயோஸிஸ் சட்டப்பள்ளியில் வரிவிதிப்பு சட்டங்களைப் படித்தார்.
அதன்பின், 2005ஆம் ஆண்டு தேவேந்திர ஃபட்னாவிஸை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மகள் உள்ளார்.