தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Ambani Family Dances At The Ring Ceremony Of Anant Ambani And Radhika Merchant

Ambani : அம்பானி குடும்பம் ஆட்டம் போட்டு பார்த்திருக்கீங்களா? இதோ வீடியோ!

Divya Sekar HT Tamil
Jan 21, 2023 12:16 PM IST

Ambani family dance : ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயத்தார்த்த விழாவில் அம்பானி குடும்பத்தினர் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அம்பானி குடும்பம் நடனம்
அம்பானி குடும்பம் நடனம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி.ஹெல்த்கேர் CEO விரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் ராதிகா மெர்ச்சென்ட். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது.

அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட். - ஆனந்த் அம்பானி
அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட். - ஆனந்த் அம்பானி

இந்நிலையில் குடும்பத்தினர் நண்பர்கள் சூழ ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் நிச்சயதார்த்தம் நேற்று தொடங்கி நடைபெற்றது. இதில் குஜராத்தை சேர்ந்த இந்துக்களால் கடைபிடிக்கப்படும் கோல் தானா மற்றும் சுனரி விதி சடங்குகளுடன் நடைபெற்றது.

கோல் என்றால் வெல்லம், தானா என்றால் கொத்தமல்லி விதைகள். இவை இரண்டையும் நிச்சயத்தார்த்த விழாவின் போது, மணமகன் வீட்டில் கொண்டு வருவர். மணமகளின் குடும்பத்தினர் மணமகன் வீட்டிற்கு பரிசுகள், இனிப்புகளுடன் வருவார்கள். நிச்சயம் ஆகப் போகும் ஜோடிகள் மோதிரங்களை மாற்றிய பிறகு, ஐந்து திருமணமான பெண்களிடம் ஆசி பெறுவார்கள்.

ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயத்தார்த்த விழா
ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயத்தார்த்த விழா

அதனைத் தொடர்ந்து திருமண பத்திரிகை வாசிக்கப்பட்டது. பின்னர் பரிசுகளையும் இனிப்புகளையும் இரு குடும்பத்தினரும் மாற்றிக்கொண்டனர். பின்னர் நீதா அம்பானி தலைமையில் அம்பானி குடும்பத்தினர் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அம்பானி தனது குடும்பத்தினருடன் மேடையேறி மிக அழகாக நடனமாடி மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்லியது, மணமக்களையும், விருந்தினர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அம்பானி குடும்பத்தினர் நடனமாடிய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணம் தேதி தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் எனர்ஜி சார்ந்த வணிகங்களை தலைமை தாங்கி நடத்தி வருகிறார். ராதிகா மெர்சன்ட் என்கோர் ஹெல்த்கேர் குழுமத்தின் இயக்குனராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்